பசுமை வெளியில்
பகற்பொழுதில்
காவல் காக்கும்
ஏழைத் தொழிலாளி
இரந்தும்கொடுப்பார்
இங்கு எவரும்மில்லை
வருந்தி உழைத்தால்
வாழ்வில் உயரவில்லை ..!
போடியார் செய்யும்
பொல்லாச்செயல்களால்
வசந்தத்தைத் தேடி
வாடுவோர் பலர்!
சுரண்டல் வாழ்கையில்
சுகத்தை கண்டு
அகிலத்தில் வாழும்
அவர்களும் மனிதர்கள்
தினமும் வருந்தி
உழைக்கும் மனிதர்
வாழ்வில் வசந்தம்
ஏன் தான் பறிப்பு ...?
ஏழ்மைக் கவிஞன்
இங்கே உருவாகுவான்....!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக