சனி, 28 பிப்ரவரி, 2015

நலமே செய்யும் உருவங்கள்!காட்டில் வாழும் மிருகங்கள்
கயமை செய்யா உருவங்கள்!
நாட்டில் வாழும் மனிதரிலும்
நலமே செய்யும் உருவங்கள்!
ஏட்டில் படித்த அறிவில்லை
இறையைக் காணும் நெறியில்லை!
காட்டில் கூடி வாழுகிற
காட்சி கூட நாட்டிலி(ல்)லை !
உயர்வு தாழ்வு அவைக்கில்லை
உலகை ஆளும் ஆவலில்லை !
கயமை மிருக வாழ்க்கையிலே
கானல் கூட அரிதாகும்!
பொறாமை கொண்ட அகமில்லை
புரியுந் தன்மை அவைக்கில்லை!
கருமை நெஞ்சத் திலுமில்லை!
காட்டில் ஒன்றைக் கூடிவரும்
உள்ளம் தன்னில் ஒரு எண்ணம்
ஒரு நாள் கூட வைத்து விடா(து)
கள்ளம் கொண்ட மனிதரிலும்
காட்டு மிருகம் மேலாமே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக