துடி துடிக்கும் மீனாய்
நீரில்லாத நிலத்தை நோக்கி
என் உயிர் கொதித்து அலர்கின்றது
இறைவனின் சோதனையென வியாதிகள்
உடல் வலியெடுத்து
நாடி நரம்புகளில் ஊர்ந்து
குருதியில் உறைந்து உருவத்தை மாற்றும்
இன்சுலினை உறிஞ்சி சுவாசிக்கும் மூச்சு
மெக்போமின் ,டானியல் சக்கரையின் சமநிலை கட்டுப்பாடு
நொந்து வெந்து வேதனை சுமக்கின்றன
உச்சி முதல் உள்ளன்க்கால் வரை
காச்சலாய் ...தலையிடியாய் ....
நடு நடங்கும் உறுப்புகளாய் ...
நாவுகள் வரண்டு அருவியாய் பாய்ந்தோடும் வியவைத் துளிகள்
மூச்சு வாங்கும் உணர்வுகளின் உறுப்புக்கள்
இருளாய் மாறியும் ... மங்களாய் தோன்றியும் ...
பார்வைகள் தூரப்பார்வையாய் தெளிவற்றுக் கிடக்கும்
சங்கிலித் தொடராய் மாற்றங்கள் தொடர ...
உடம்பில் ஒட்டிக்கிடக்கும் வலி
சாவடிக்கும் நோவு
சோதனை நிறைந்த விதி
பொறுமை சோதிக்கும் வியாதி
தன்னை தங்கவைக்கின்றது வைத்திய சாலைகளில்
வாழ்க்கயின் போலி பிறப்பு
வயிற்றில் கருவாகி , உருவாகி
மண்ணில் சங்கமமாகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக