ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

உன்னுறவு ..!


அன்பு காட்டும் உன்னை
நினைத்துப் பார்க்க தவறுவதில்லை
என் மனம்

அன்பு வார்த்தை சொல்லி சந்தோசமாய்
வாழவைத்திடும் என் நாவு

கண்ணீர் துளி தூவி 
நன்றிக் கடன் தீர்க்கத் துடிக்கின்றது

சிறு பொழுதினில் கனவாய் வந்து நிழலாய் தடவி -
உறக்கத்தை விடியலாக்கி விடுகிறாய்..!

சுவாசிக்கின்ற சுவாசத்திலே உயிர் மூச்சு நீயெனக்கு
அன்பைக் காட்டி பாசத்தை சொரிகின்றாய்

மனித நேயத்துக்குள்
விடி வெள்ளியாய் உன்னினைவுகளை உதயமாக்குகிறாய்
உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கிய்ப் படுத்துகிறாய்

கவலைகள் மறந்து
சந்தோசம் நிறைந்து
மகிழ்சி தொற்றும் போது
விழித்துக்க்கொள்ளும் என் மனம்

உள்ளத்தில் உன்னை நினைத்து …
அல்லாஹ்விடம் பிராத்தனை செய்கின்றது
வரமாய் உன்னுறவு இதமாய் கிடைத்தமைக்கு ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக