சேனைப் பயிரைத் திருடவரும் கிளியினத்தை
தேன்னிய குரல் காட்டித் திரத்துகின்ற -மானைப்
பெண்ணெற்று சொல்லின் பெரும் பிழையே தேவதையின்
கண்ணிரண்டும் காதற் கயல் !
சோலைக் கிளியைச் சூவென்று நானோட்டும்
சேலையுடுத்த கிளி செவ்வந்தி -ஆளை
மயக்கும் மாறனவன் ! மலரம்பே விழி மலர்கள்
நயந்தொழுகும் அவை நின்று நரை !
சோளன் கதிரோ ! சுவையான மாதுளையோ !
வாளென்ன நிற்கும் வடிவமது ?- காளை
இதயத்தைக் கண் மூடிக் கண்ட படி குத்துவது
எது வென்று புரிய வில்லை ஏம !
வெண்டை விரல் வடிவம் !வேல்வடிவம் உள்ளங்கை
கொண்டை சிறு பூசனிக்காய் !கோலையிதழ் தண்டுக்
கரங்கள் :காலிரண்டும் செங்கதலி ! ,கன்னியவள்
அருங்காதல் நெஞ்சத்து அலை !
வெடித்த வெள்ளரியின் விதை போன்ற பற்சிரிப்பு !
கடித்துண்ணத் தூண்டும் கன்னங்கள் - இடித்த
ஏலக்காய் போலே !இவள் பேச்சு தமிழ் மணக்கும்
காலத்தால் அழியாத கலை ..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக