சனி, 2 ஜூன், 2012

கலைமகள் ஹிதாயா றிஸ்வி வாழ்க ...!

கவிஞன்
கதை சொலபவ னல்ல
கற்பனைத் தீயை
கலங்கரை விளக்காக்கி
சமுதாய இருட்டுக்கு
வெளிச்சமிடுபவன்

மானுட உறவுக்குள்
மறு பிறப்பெடுக்கும்
ஊத்தைகள்
கவிதைக் கரங்களால்
சலவை செய்யப் படுகிறதென்றால்

கவிதை
மரணிக்கவில்லை என்பது
அர்த்தம்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
இலக்கிய உலகில்
நிறுத்திக் கொண்ட
ஆளுமைப் பங்கை
இங்கே
கவிதைகள் மூலம்

பிரசவத்தை
பிரசுரத்தின் மூலம்
செய்து காட்டிவருவது
இலக்கியத்துறையில்
அவள்
இறுகிக் கொண்ட இணைப்பை
இனங்காட்டி வைக்கிறது .

வாழ்வுச் சுவட்டை
அநுசரித்துபோன
சகோதரி ஹிதாயாவின்
அர்த்தமுள்ள
சிந்தனைக் கரங்கள்
அமாவாசைக் கருப்புக்கு
நிலவுகளை அழைத்து வந்து
நிறுத்தி விடுகிறது

கற்பனைகளின்
மெல்லிய சுவாசங்களால்
வாசகர்களுக்கு
தீனி போட்டுவருவது
பாண்டிய த்தை
விவாகரத்துச் செய்து விட்டு
படிக்கின்ற உள்ளங்களை
இலக்கிய பந்தலுக்குள் வைத்து
பழந் தமிழ்
தாலி கட்டுகிறது

இலக்கிய உலகில்
அறுவடை செய்கின்ற
கலைமகள் ஹிதாயாவின்
இலக்கியக் கனிகள்
ஒரு
நலிந்த சமூகத்தின்
அவலப் பசிக்கு
சோறு போடுமென்பது
என் கணிப்பு ...!

பாரதி கண்ட
புதுமைப் பெண்ணின்
நெஞ்சுறுதிச் சாயல்கள்
கவிதைத் தொழிலில்
புலப்படும் போது
இந்தச் சகோதரியாலும்
கலையுலகின் காவலனாய்
கணிக்கப் படுகிறாள்

பாவை இவளின்
பா -தொகுதி
முதன் முதலில்
முஸ்லீம் பெண் வரிசையில்
பெண் இனத்தின் வரிசையில்
இலக்கிய வரலாற்றில்
ஈ ழத்திற்கொரு
பெருமைக் கொடு

கலைக்காக
கலைமகள் ஹிதாயா
எழுது கோலைநிறுத்தியிருப்பது
சமுதாய ஏட்டில்
ஒரு
பற்றுக் கோட்டை
வரைந்து காட்டப்
பாடு பட்டிருக்கிறாள்
என்பது புலனாகின்றது !

இறுதியாக ,
கறுப்புச் சுவரின்
வெள்ளைச் சித்திரங்களாக
இவளின்
கலை வடிவங்கள்
ஆளுமை பெற்று
வாழ்ந்து வழி காட்ட
இதயப் பிரியமுடன்
பிரிய வாழ்த்துகள்....!

ஈழத்த பாவரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக