தோழி,
என் மரணம்
நோயினாலோ....
சதியினாலோ...,
விதியினாலோ.....
... இயற்கை அழிவினாலோ...
விபத்துக்களினாலோ....
தாக்குதலினாலோ......
பலி வாங்குதலினாலோ....
இயற்கையாகவோ .....
நேர்ந்தாலும் -
எனக்கு பரவாயில்லை..!
ஆனால்
என்னுள்ளிருக்கும்
உன் நினைவுகளை மறந்து
பிரிந்து ...
இழந்து ....
என்னால் வாழ முடியாது..!
தயவு செய்து என்னை
தனிமை யாக்கி விடாதே...!
மனதை நோவினை செய்து
மரணத்தை தடவ வைத்துவிடாதே
நீ பேசாமல் மௌனம் சாதிப்பது
என்னால் -
தாங்க முடியாது ...!
உயிரை இழக்க முடியாது ...!!
நினைவுகளை அழிக்க முடியாது ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக