சகீ
நீ
அன்பை பேசி பேசி
எனக்குள்
சிறைப்பட்டுப் போய்
நாட்கள் கரைந்து விட்டன
நான் சாதாரமாகத்தான்
உன்னை எண்ணினேன்
ஆனால்
தினம் தினம்
உன்
இனிய பேச்சுக்கள்
உன் இதயத்தை
இமயமென
எனக்கு பறை சாற்றியது
அதனால் தானே
என் இதயத்தோடு
இப்படி
இறுகிப் போனாய் ...
எம் தாய் மண்ணின்
தொப்புள் கொடி உறவோடு
ஓட்டிப் போனாய் ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக