ஞாயிறு, 11 நவம்பர், 2012

என்னை நேசிக்கும் 
நட்புள்ளத்தின்அணைப்பில் 
என்னை நினைத்துப் பார்கிறேன்

ஈரமிருக்கும் இடமெல்லாம்
அடி வேரை நகர்த்திச் செல்லும்
வேர் போல தொடரும்
என்னுறுப்புக்களின் நரம்புகளில்
நீயும் நகர்கின்றாயோ யானறியேன்..

ஓட்டை லயங்களுக்குள்
சூரியனை தரிசிக்கின்ற உன் வாழ்க்கை
என் மூச்சிக்களை சுவாசங்களாக்கிக்-கொண்டு
உன்னுயிர் என்னுயிராகி
என்னுயிர் உன்னுயிராகி
நீ நேசித்த உறவின் ஆழத்தைப் பற்றி
எத்தனை நினைவுகள் என் மனதில்!

உன் பாச பின்னல்களுக்குள்
சிக்கிக் கொண்ட முடிகளைப் போல்
எனக்குள் நண்பியாகிக் கொண்டாய்!!!!

அன்புறவியின் பிரசவத்தில்
நட்புக் கொடியாய் படர்ந் தாய்!
இப்போது நீ
தொப்புள் கொடி உறவா....????
சிவப்புக் கொடியின் நிழலா...????
பச்சைக் கொடியின் சின்னமா...???
இதயத் துவாரங்களால் வெளியேற்ற-முடியாத

இறுகிய பாசம்
உன்னை நேசித்த பின்னே
மறக்கக் கூட முடியவில்லை எனக்கு...
உன்னை எப்படி பிரிந்து வாழ முடியும்...
உன்னை இழந்து விட்டு நான் வாழும் -இவ் உயிர்
உயிருள்ளவரை நீ கூட
சுவாசித்திராத மூச்சு கண்ணே.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக