செவ்வாய், 13 நவம்பர், 2012


பாச உயிரின் உறவு விண்ணிலே .
..........................................................
இதய  மண்ணில்  தோன்றியே - நல்ல
அன்பினை விதைத்திட்டாள்  ஊன்றியே
பாசமுடன் அன்பு காட்டினாள் -இழி
மதபேதம்  வேண்டாமெனத்  தூற்றினாள்

நல்லன்பு மனம் கொண்டவள்  - கடும்
சாதி பேதங்களை உடைத்தவள்
நட்பு     உள்ளங்களை  நேசிப்பவள்  கெட்ட
பொலி உறவுகளை சபிப்பவள்


மூடத் தனங்களை  வெறுப்பவள்  அதை
முற்றாய் மாற்றி வாழ்பவள்
நட்பிலே  சுடரெற் ரினாள்   அன்பு
உள்ளத்தின் ஆழத்தினை காட்டினாள்


பெண்ணின் பெருமையை காட்டினால்  பாச
அன்னையின் பற்றினை பாடினால்
சாதிக்  கஞ்சாது  வாழ்ந்திட்டாள்
சாகப் புகழினை பெற்றிட்டாள்


அன்புக் கடைக் களம் கொடுத்தே  நல்ல
பாசம் நிலைத்து நிற்கும் இதயமே
வேரிட்டவள் கலைமகள்  இதயமண்ணிலே
பாச உயிரின் உறவு விண்ணிலே ..


கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக