கன்னி யான் மலரே என்னைக்
காளையோர் தேனின் வண்டாய்
பின்னியே நாளும் சுற்றிப்
பிரியமாய்க் கூடு கின்றான்
மன்னவன் அழைப்பில் யா னும்
மகிழ்கிறேன் சொர்கம் கண்டே
காதலே கொண்டான் என் மேல்
காந்தமாய் கவர்ந்து கொண்டான்
மோதலோ மெக்குள் இல்லை
காதலே வருநாள் மட்டும்
சத்தம் இணைந்து நிற்போம்
தேவதை என்றான் என்னில்
தேன் வதை உண்டு நின்றான்
காவலன் என்றான் என்னைக்
கள்வனாய்க் கவருகின்றான்
பாவலன் அவனின் கையில்
பாவிதழ் ஆனேன் நானும்
வாழ்வெனும் பூங்காவிற்குள்
வந்தநல் தென்றற் கற்றாய்
சூழ்ந்துமே என்னை நாளும்
சுகத்தினில் ஆழ்த்துகின்றான்
ஆள் கடல் அன்பில் தோய்ந்து
அணு தினம் மகிழ்கின்றேன்
காளையோர் தேனின் வண்டாய்
பின்னியே நாளும் சுற்றிப்
பிரியமாய்க் கூடு கின்றான்
மன்னவன் அழைப்பில் யா னும்
மகிழ்கிறேன் சொர்கம் கண்டே
காதலே கொண்டான் என் மேல்
காந்தமாய் கவர்ந்து கொண்டான்
மோதலோ மெக்குள் இல்லை
காதலே வருநாள் மட்டும்
சத்தம் இணைந்து நிற்போம்
தேவதை என்றான் என்னில்
தேன் வதை உண்டு நின்றான்
காவலன் என்றான் என்னைக்
கள்வனாய்க் கவருகின்றான்
பாவலன் அவனின் கையில்
பாவிதழ் ஆனேன் நானும்
வாழ்வெனும் பூங்காவிற்குள்
வந்தநல் தென்றற் கற்றாய்
சூழ்ந்துமே என்னை நாளும்
சுகத்தினில் ஆழ்த்துகின்றான்
ஆள் கடல் அன்பில் தோய்ந்து
அணு தினம் மகிழ்கின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக