ஞாயிறு, 6 ஜனவரி, 2013

மங்கையே தென்றல் யானுன் 
மனத்தினைத் தொட்டேன் பின்னர் 
எங்கெலாம் தேடியுந்தன் 
இதயத்தைக் கவர்ந்த கள்வன் 
தங்கிடும் இடத்தைக் கண்டு 
தவிப்பினைத் தெரியச் செய்தேன் 
சங்கெணும் கழுத்தில் தாலி
தரித்திட வருவே னென்றான்

என்னையே தூது செல்ல
இறைஞ்சினைஏற்றுக் கொண்டான்
உன் மனம் கவர்ந்த் ஆளன்
உழைத்திட அரபு நாடு
சென்றுமே யுள்ளான் மீண்டும்
திரும்புவேனென்று சொன்னான்
அன்னவன செல்வத்தோடு
அணைத்திட வருவான் நம்பு

கள்வனைக் கண்டேன் நல்ல
கண்கவர் அழகன் பேச்சில்
வெள்ளையாம் உள்ளம் கண்டேன்
விஞ்சிடுமன்பு கண்டேன்
கள்ளியாம் நீயு மன்னோன்
கனி மனம் கவர்ந்த கள்ளி
அள்ளியே உன்னைக் கொஞச
அவன் வரும் சேதி உண்மை
...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக