ஞாயிறு, 6 ஜனவரி, 2013

கனவுகளை ஜீரணிக்கும் 
இதயம் 

கால நகர்வுகள்
கனவுகளை சுமந்தவறே 
பயனிக்கும் .....

எதிர் கால
சுதந்திரம் நாடி
ஏங்கித் தவிக்கும் இதயமும்
இடையில் .....
பாதையைமறிக்கும்
பாதகச் சூழ் நிலைகளும்

இடமாறித் -
தடமாறிப் போன
உறவுச் சுவாசங்கள்
தள்ளியே நிற்க
தளிருடல் வேகும்

ஒரு நேர யாசகத்தில்
ஓராயிரம் கற்பனைகள்
சுமந்த வாழ்வு
காற்றாடியாய் .....
அந்தரத்தில் ஆடும்

விரக்தி வெளிக்குள்
முகத்தை மறைக்கும்
உணர்வுகளின் தாகம்
தாகங்களைக் கக்கும்


பெரு மூச்சும்
அணல் மூசுக்களாய் மாற
அகம் கொப்பளிக்கும்
கேள்வித் தீயில்
வாழ்வு
வரட்சியாகி வெடிக்கும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக