ஞாயிறு, 6 ஜனவரி, 2013

மனம் நொந்து கண்ணீர் வடிகின்றது 
இதயம் துடிக்கின்றது 

உறவினர் முதல் ஊர்றவர் வரை 
பேரதிர்வு

மனம் சோர்ந்து போன
மாணவர் கூட்டம்

படித்து படித்துக் கொடுத்தே
மாணவர்களை முன்னேறச் செய்து இருபத்தாறு ஆண்டுகள்
கடந்து விட்டன

உயர் பட்டங்களும் பதவிகளும்
பெறப் பட்டு
குடும்பம் சந்தோசப் பட்டது தான் எத்தனையோ ...?

இதனால்மகிழ்ச்சியில் நிறைந்து போனது
மனசும் ஆசிரிய சேவைகளும் தான் ..

பழுத்த ஓலை இருக்க பச்சோலை விழுந்த கதை
வாழ்வில் மேடையேறியது

சோர்வற்ற உறுப்புக்கள்
சுவாசங்கள்
உயிர் மூச்சுககளையே அடைக்க
மரணமானது என் மைனி தான்

பாசம் நிலைக்கட்டுமே யென நினைத்திருக்க
உயிர் மறைந்தறக்கான காரணம் தான் என்ன ...?

பகட்டாணனவாழ்க்கை.......'
போலியான வார்த்தை .....
பொறாமையான உள்ளம் .....
கோபமான மனம், ......
வீணான பேச்சு ......
தீய செயல்கள் ......எதுவுமே இல்லை

அன்பான உள்ளம்
பாசமான உறவு
[பொறுமையான மனசு
நேர்மையான இதயம் எவ்வளவோ இருக்க
உயிர் உடலை விட்டுச் சென்றது

உறவின்றி உயிர் பிரிந்து
போன பின்னும்
நானிருந்து என்ன பயன் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக