ஞாயிறு, 6 ஜனவரி, 2013

காலம் எனும் பந்து 
வாழ்க்கையோடு 
விளையாடிக் கொண்டிருக்கின்றது 
அதற்க்கு எண்ணிக்கை கிடையாது 

நாட்கள் நகர்வதே 
நமக்கு _
மரணத்தின் நினைவூட்டல்

மௌத்து எப்போதும்
முத்தம் இட்டுக்கொண்டு தான்
இருக்கிறது.

மனிதயினம்
மனதால்
மரணத்தை மறந்து விட்டு
உதடுகளால் (நாவினால் )
கோடிக்க‌ண‌க்காய்
வார்த்தைகளை
தேனாய் (இனிப்பாய் )
எச்சில் ப‌டுத்திக்கொள்கின்றன
(சுவைத்துக் கொள்கின்றன )
மௌத்து வந்த பின் எல்லாம்
தடவிப் போகும் காற்றாய் மறைந்து போகின்றன

வாழ்வுக்கு வயது வித்தியாசம் ....?
இருப்பினும் _
மரணம் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான்


நாடி நரம்புகளில்
உடல் உறுப்புக்களில்
ஓடிக் கொண்டிருக்கும்
வியாதி
நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கிறது ..!

உயிரையும் காணோம்
மூச்சையும் காணோம்
சுவாசத்தையும் காணோம்
பிறப்பெண்ண் இறப்பெண்ண்
இன்மையும் மறுமையும்
போலியுலகம் (கலியுக‌ம்)
இத்யாதி இத்யாதி..


ஒரு விநாடியிலும்
ஓராயிரம் மரணம் நேர்ந்து
உயிர் பிரிந்து கொண்டு
மண்ணறை நாடிச் செல்லும்

இஸ்ராயீல் (அலை )அவர்கள்
எந்த‌ உருவத்தில் வ‌ர‌ப்போகிறார் ?
குர் ஆணும்
ஹதீஸும்
ஆதாரமாய் இருக்கின்றன !
ம‌னித‌ர்க‌ள் தான்
அறிவதில்லை ..! புரிவதில்லை....!!

மரணத்தின் வ‌ழியாக‌
மறுமையுலகம் நுழைய‌லாம்.
இவ்வுலகில் தான்
வாழ்; முடிய‌வில்லை.


இப்போது
உலகில்
விஸ்வ‌ரூப‌ம்
கொலை களவு கொள்ளை
பாலிய‌ல் ப‌லாத்கார‌ம்.

மனித இனமே
இவ்வினத்தை
நேசிக்க முடியு மா ...?


இருபத்தி மூன்று வருடம்
மனிதர்களால் படைக்கப் படாமல்
இறைவனால் இறக்கப்பட்ட
திருமறை
ஒழித்துக் கொண்டே யிருக்கின்றன
மனிடகளின் மனம்
இன்னும்
அருளினைப் பெறவில்லை
ஹதீஸ் மூலமாக
போதனைகளை பெறவில்லை


பணம் பிணமாகிப் போகின்றது
மனம் _
பந்தாய் விளையாடிக் கொண்டிருக்கின்றது


நம்
மானிடர்களின்
சுவாசங்களை யெல்லாம்
மூச்சுக்களை யெல்லாம்
நன்மை _தீமைகளையெல்லாம்
மீசான் திராசு
நிறுத்துக் கொண்டிருக்கும் ...!


=01.01.2013=====

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக