ஞாயிறு, 6 ஜனவரி, 2013

கடற்கரையிலே மணற் பரப்பிலே
அந்தி நிலவின் நிலலொழுகும்
அலைகளின் தடவுலுடே
மேகத்தின் அழகை ரசித்திருப்பேன்

தாக்கப்பட்ட நிலையிலும்
என் மனம் சமாதானம் தேடும்
சுதந்திரம் குளிக்கும்
ஊரெல்லைகளில் திரியும் தென்றல் நான்

இதயத்தின் நிம்மதி சுவாசத்தை
இந்த மண்ணில் இழந்தேன்

இளமைகளின் அழகை .....
பறவைகளின் ஒலியை ....
இயற்கையின் இடுப்பை ....
தனிமையின் ஸ்பரிசத்தை ....
இதயத்தின் காதல் உணர்வினை ...
புதைத்து எழும் நாகரிகக் குறைவு

சந்திரனின் ஒளியும் மேகத்தின் மறைவில்
மின்னலின் புற நீக்கல்

மனிதனின் மாற்றமும்
சுழலின் மறுதவிப்பும் ....

நிம்மதிப் பெறு மூச்சில்
சுவாசிப்போர் எவருமிலர்
தலை நிமிர்ந்து
வானைப் பார்க்கின்றேன்

பாதியாய் -நிலவு
துயர் வடித்து
என் வதனம் பார்த்தாழும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக