ஞாயிறு, 6 ஜனவரி, 2013

இன்ப வேதனை 
கண் முன்னே விரிந்த
கண்கள்
அவன் விழிக் குளத்தில்
நீர் முத்துக்களைக்
கோர்க்க ......

அவன் சொன்னான் :
கண்ணே கலங்காதே !
காலமெல்லாம்
உன் கண்கள்
கலங்காமற் பார்ப்பது
என் பொறுப்பு

காதல் கனிந்து
காவலானது
நனவாகாமற் போன
கனாக்களால்
அவன் விழிக் குளத்தில் ....
மீண்டும் உடைப்பு

அட்டச் சீ .....
அழு மூஞ்சிகளைக் கண்டாலே
பிடிக்காது எனக்கு
அவன் சொன்னான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக