ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஓடாதீர்கள் 
எத்தனை
ஏழ்மை மலர்களில் 
தேனைத் திருடினீர்கள் 
ஓடாதீர்கள் 

முக மூடித் திருடர்களைக்
கூடப் பிடித்து விட்டோம்
உங்கள்
முகங்கள்
எமக்கு மனப் பாடம்
கைது செய்வதில்
கருணை காட்ட முடியாது

எங்கள்
மலர்களின்
முட்களை ஒடித்துத்
தேனையுண்டது
உங்கள் பொழுது போக்கு
என்றால் ..

எங்களுக்குக் கூட
பொழுது போக்கு வேண்டாமா...?
நாமும்
வண்டுகளைத் தேடித் திரிகிறோம்
மயக்குவதற்கு அல்ல
குத்திக் கிழித்து
குதறி எறிவதற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக