ஞாயிறு, 16 டிசம்பர், 2012


என்னையும் உன்னையும்
இணைக்கிறது
நட்பு

உறவு வந்ததில்
தொலைந்து போனது
மன வேதனை

பாசம்
மழையாய் பொழிகின்றது
இதயம் குளிர்கின்றது

நட்பு தொடர
உறவில் மகிழ்கிறது
மனம்

பாசம் அணைக்கிறது
குழந்தை அழுகிறது
வயிற்றுப் பசி

உறவிலிருந்து
விடைபெறும் உயிர்கள்
மரணத்தின் அழைப்பு

மாமரம்
பயன்பட்டது
மீசான் கட்டை

வியாதிக்கு
மருந்து கொடுக்கிறது
நட்பு

தோழர்களின்
சரித்திம்
முக நூல்

இருள் வீட்டுக்கு
(வெளிச்சமாய்) சுடர் கதிர்கள்
சூரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக