ஞாயிறு, 16 டிசம்பர், 2012


பலஸ்தீன உறவே ஏன் நொந்து அழுகின்றாய்
பச்சிளம் பாலகரை இழிமதியர் கொலைசெய்தற்க்கா ...?
இஸ்லாமிய மதத்தை பிறந் தேன் துடிகின்றாய்
பலஸ் தீனம் தீன் கொடி அழிந்து விட்டதென்றா ...?
வெந்து மனம் நொந்து அழுகின்ற உள்ளங்களின்
துயரத்தின் கண்ணீரெல்லாம் தாக்குதலின் வெளிப்பாடா ..?
தீ னொடு நிறைந்த பாலஸ்தீன தாய் மண்ணே
தாவ ரத மானாய் இஸ்ரேலியாரின் தீச் செயலால்

இஸ்லாம் மலர்ந்த தீனின் பலஸ்தீனத்தை
இஸ்ராயிலே நீயழித்துச் கொலைகாரன் ஆகினை யே
தினமும் இறைபணியில் நடைபயிலும் தீனோர் உன்னருகில்
வாழ்வதே உன் பசிக்கு தீனுடல்கள் தேவை யென்றா
தூவியே குண்டுகளை அப்பாவியுடல்களைக் துளைக்க வைக்கிறாய்
தனலில் எமதிதயம் சுட்டுக் கரிந்தது போல்
அல்லாஹ்வே துடிக்கிறதே பாவிகள் கொடுஞ் செயலால்

தேனான மார்க்கத்துள் திடமான நெஞ்சோடு
தேர்ந்தஅறிவாற்றல் சிறந்த நற் கொள்கை
நிறைந்த தீனோர்களின் புனிதமான பாதையிலே
புரளாது வாழ்ந்த மக்கள் புனிதவுயிர் பிரிந்ததுவோ
நாடு அழிந்ததுவோ உலகெங்கும் பேரதிர்ச்சி
இஸ்ராயிலரின் வெறி செயலுக்கு பலஸ்தீனியர் தான் இரையோ
இஸ்லாமிய நாடே பத்ரு சகாபாக்களும்
மடிந்து தான் போனார்கள் மரணித்தோர் சுவக்கமாவார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக