ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

புனிதம் மணக்கும் ஹஜ்
மண்ணாக வாழ்வில் முஸ்லிம்
மாந்தரைப் புனிதம் பண்ணும்
புண்ணியம் ஹஜு க்கு முண்டு
புரிந்தவர் கின்பம் உண்டு ..!

பாவத்தை யகற்றி நெஞ்சை
பா வென மாற்றும் ஹஜ்ஜை
தாபமாய் தரிசித் தோர்கள்
தரணியில் ஹாஜி யாவார்


இஸ்மாயில் நபி செய்த
இணையிலா தியாகந் தன்னை
புஸ்பமாய் மணக்கக் கண்டு
பூரிப்போர் ஹஜ்ஜில் தானே


சத்தியம் வாழ்வில் கண்டு
சந்ததி தழைக்கச் செய்து
நித்திய இன்பம் தந்து
நிலைப்பது ஹஜ் நன் நாளே

ஆடைகள் புதிதாய்ப் பூண்டு
அகத்தினில் மலர்ச்சி பூண்டு
வாழ்வோருக் கருளும் நெஞ்சை
வழங்கிடும் ஹஜ் நன் நாளே


ஸம்ஸம் தண்ணீர் மாற்றிப்
தவச் சுகம் தன்னில் நீந்தி
இம்சையே இல்லா வாழ்வில்
ஈ த்திடும் ஹஜ்ஜே வாழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக