ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ஏனம்மா ?இயற்கை அழகு உனக் கிருந்தால்
செயற்கை மேக்கப் ஏனம்மா ?
மானின் விழிகள் உனக் கிருந்தால்
'மை 'யைப் பூசல் ஏனம்மா ?

இயற்கை கூந்தல் அழகிருக்கு
டிஸ்கோ வெட்டு ஏனம்மா ?
அன்ன நடையின் அழ கிருந்தால் 
அடியுயர் பாதணிகள் ஏனம்மா ?

பவளச் சொண்டு உனக்கிருந்தால்
பளிச்சிடும் சாயம் ஏனம்மா ?
அதிசய வாசனை உனக்கிருந்தால்
அத்தர் வாசனை ஏனம்மா ?

1 கருத்து: