புதன், 4 செப்டம்பர், 2013

ஏன் படைத்தான் இறைவனும் ....?



கூரையிலே ஆயரங்கண் !கொளுத்தும் வெயில்
குடியிருக்கும் உள் வீட்டில் ! மாரி க் காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் !எங்கள் 
வாழ்க்கையெலாம் துன்பமாய் மாறிப் போகும் !

பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்!
பசியாற உண்பதற்கு உணவு மில்லை !
நோயில்லா வாழ்மெக்கு அமைய வில்லை
நொடிப் போதும் எமையின்பம் தழுவவில்லை!

கால்வயிற்றுக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தா னெமக்குத் தோழ ராகும் !
இம்மையிலே நமது இடம் நரகமாகும் !

பசி வரவே மாத்திரைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் !தனவந் தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாயக ளுண்ணும்
வகையான உணவுகளும் எமக் கில்லை !

பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்தவைத்துக் கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு !பணத் துடிப்பு
பகையாகிப் போனதனால் வீணில் வாழ்ந்தோம் !


இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன்படைத்தான் இறையவனும் ?உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான் நம்மை விட்டு ?


நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறி யில்லா மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில் கிடந்து நாம் உழ வர் எல்லாம்,
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம் !

2 கருத்துகள்:

  1. ஏழ்மையின் நிலையை உருக்கமாக சொல்லிவிட்டீர்கள
    சந்தம் விளையாடும் கவிதை

    பதிலளிநீக்கு
  2. அருமையான உங்கள் கருத்துக்கு மிக்க நமறி சகோதரனே

    பதிலளிநீக்கு