பிணமாக நினைத்துப் போய்
பணமாகத்
திரும்பி வரும்
மீனவரே ...!
உன் -
வெற்றுடம்பில்
எத்தனையெத்தனை
வேதனைக் கீறல்கள்
அத்தனையும் உன்
வறுமையின் கொடுகள் ..!
மீன்களைப் பிடிக்கும்
மடி வெடிப்புக்கள்
வலைகளின் துண்டுகளை
கிழித்து வீசுவதால்
ஏழை மனசுகள்
கண்ணீர் கசிவுகளை
தண்ணீராய் குடிக்கும்
வானத்து விளக்கு
நூ(ர்)ந்து மறையும்
நடு ஜாமத்தில் மனத்துயரமுடன்
வீட்டரசியின்
கைத்தொலை பேசியும்
தொல்லை தரும் ....,
அறுக்குளா வலை
கீறி வலை
மாயவலை
நெத்தலிவலை
இத்தியாதி இத்தியாதி!!
படகு இயந்திரத்தைவலைகளுடன் செலுத்த
சந்தோசம் நிறைந்து நடுக் கடலில்
நிதமும் மீன்
குஞ்சுகள் நிறையும் ,
சின்ன சின்ன
கனவு வலைகளைக்
கரை சேர்பதற்க்காக
கரங்களில் பொத்தியிருக்கும்
சின்ன நூல்களையும்
இராட்சத மீன்கள்
சில -
அரித்துச் செல்லும் ..!
மாலைச் சூரியனின் மறைவுடன்
கடலில் நுழைந்து
காலைச் சுடருடன்
கரைகள் திரும்பும்
களைப்பு உள்ளங்களின்
உழைப்புக்களை
பணக்கார கரங்கள்
அபகரித்துச் செல்ல
விலை பேசி குறை போடும் ..!
கண் இமைகள்
உரக்கக் கடலில்
சங்கமிக்கும் வேளை
வியாபாரம் செய்யும்
விவஸ்த்தையற்றவர்களுக்கு
மீனவரின் அவஸ்த்தையின் வலிகள்
புரிவதில்லை ...!
கசந்த அநுபவங்களினால்
நொந்த மனசுகளின்
நசிந்த-
வாழ்வுக் கரங்களின்
உரிமைகளை பெற ,
பிச்சை கேட்டு அழையும்
எம்பிமாரும் தம்பிமாரும்
இந்த தேர்தல் மூலம்
தீர்வு விரல் கொடுப்பார்களா ..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக