ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மனித ஆத்மாக்கள்
பரந்த பூமியில் வாழுகின்ற
மனித ஆத்மாக்கள் -
மரணத்தை நாடியே 
மண்ணில் வாழுகின்றன !

வயசுத் தரையில்
பதியமிட்ட -
வாழ்க்கைப் பூக்கள்
மரணத்தின் தென்றலிலே
வாசத்தை நூகரச் செய்கின்றன !

இயந்திர உலகில்
ஓயாத இரைச்சல்களாய்
ஓலமிடும் .....
கடல் அலைகள் முதல்

தண்ணீர்
காற்று
நெருப்பு
மழை
பசி
பட்டாணி
நோய்
இன்னும் ..இன்னுமாய்
உன்னை
நேசிக்கின்றன (ஆராதிக்கின்றன )

தூசாய் பறக்கும்
பணத் தாள்களும் ,
கவலைகளெதுவுமின்றி
கறுப்போடு மாறும் வெள்ளை முடிகளும்
வறுமை பாய் விரிக்கும்

கிராமத்து லயங்களின்
தொட்டில் பிடவைகளும்
இதயத்தில்
பல கவிதைகளுக்கு
கருகொடுக்கும் ...!

என்
கவி வரிகளும் ,
இன்னும் பல
நினைவுகளுயும் மரணத்தையே
ஞாபகப்படுத்திக் கொண்டுள்ளன ..!

உன் -
மண்ணறை நாடி
நேசிக்கும் இதயம்

என் -
வெள்ளைநிறப் பேனைத துண்டு
மிஸான் கட்டையில்
அடையாளம் காட்டி
அடக்கம் செய்வது போல ..!

படைத்த மா பெரியோனே .....

உண்மையாக நான்
இந்த மண்ணில்
நடமாடும் ஒரு பிணம் தான்

சொல்லப் போனால்
சொத்து
சுகம்
பட்டம்
பதவி
அந்தஸ்த்துகளுக்கு
சொந்தக் காரணல்ல
நான்...
உன் அளவற்ற அருட் கொடைகளுகளுக்குள்..!


உலக வாழ்வில்
பலநூறு மனங்கள்
பலவிதம் வாழ ....,
ஈமானிய கொள்கைகளை
அனுசரித்து நிற்கும்
இலட்சிய வித்து
நான் .

மனித வாழ்வில்
பிறப்பு -இறப்பினை
அறிமுகப்படுத்தியவனே .....,

இன்று -
எனது கவிதைகள்
மண்ணறை வாழ்க்கை பற்றியும்
எழுதிக் கொள்ளும் .,


நீ -
கடைபிடிக்கச் சொன்ன
நடைமுறைகள்
என் -
இதயத்தின் நாடி நரம்புகளில்
பதிந்துள்ளமையினால்

நீ -
மூச்க்சுக்களாய் தந்துள்ள
இயற்க்கை சுவாசங்களால்
என் -
ஆத்மாவின் உணர்வுகளுக்கு
ஈமானிய உயிப்பினைக் கொடுக்கின்றேன்

புகழ் அனைத்துக்கும் சொந்தக் காரனே ..!

இந்த -
புரியாத மனிதர்களுக்கும்
உயிரை மதிக்காத ஜென்மங்களுக்கும்
வாழ்க்கை பயணத்தில்
நேரான வழியைக் கொடு ..!

என் -
கவிதை வரிகளுக்கு
விமோசனம் காட்டி விடு !

எல்லா மனிதர்களும்
சிந்திக்கட்டும் -இந்த
உற்றெடுக்கும்
கவிதை வரிகளினால்

என்-
உள்ளத்து உணர்வுகளுக்குள்
ஜீவித கரங்களுக்குள்
பிண்ணப்பட்டிருக்கும்- இந்த
முடி தூரிகையினை
முஹம்மது நபியின் போதனையாக
இறைவா நீயே
விளக்கம் கொடுத்து விடு ...!

அப்போது தான்....
சாதி மத வேறுபாடுககின் புற்றிலிருக்கும்
போலி பேச்சுக்களின்
வீண் விவாதங்களை நீக்கி ...
.
மனிதர்களை கெடுக்கும்
முட்டாள்களை விரட்டி

நிம்மதி வாழ்வினை
மண்ணில் நாடலாம் (வாழலாம் )

மண்ணறைக்கு நல்லவற்றை
கொண்டு போகலாம் ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக