ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தட்டிவிடும் - தொழுகை


 

தட்டிவிடும் சக்ராத்வேதனையத் தட்டிவிடும் - தொழுகை
சுவர்க்கக் கதவின் திறப்பு !

வாதாடும் அல்லாஹ்விடம் வாதாடும் தொழுகை
பாவக்கறை அகற்றும் சோப்பு !

பொறுமையும் பெருமையும் தொழுவருககருக் கென்றென்றும்
பரிசாய் கிடைக்கும் ஜன்னத்துல் பிர்தொஸ் !

ஓதாமல் இருக்கும் மனமே பாழ்வீடு
சுட்டு எரிக்கும் நெருப்பு !

போட்டி பொறாமை கெ ட்டவர்களுக் கெப்போதும்
நல்ல பாம்பின் அழகு !

பொழியும் இறையருள் நினைக்காமல் கிடைக்கும்

மாணிக்கத்துக்கு கேற்ற மதிப்பு !

நினைவுகளில் கனவுகளின் ஏக்கங்கள் ...!





நினைவுகளில்
கனவுகளின் ஏக்கங்கள் ...!
இரவின் மறைவில்
விடியலின் உதிர்ப்பில் 
மருந்தும் கையுமாய்
எழுந்தும் எழும்பாத
நிலையில் நாம் ..!

உள்ளத்து உணர்வில்
விண்ணும்,மண்ணுமாய்
இடியும் மின்னலுமாய்
கடலும் அலையுமாய்
இன்னும்.இன்னுமாய் ..
நினைவுகளில்
கனவுகளின் ஏக்கங்கள்
கொஞ்சம் மனதில்
வேதனைத் துளிகள் ...!
காலையும், மாலையும் நகரும்
வைத்தியர்களுடனும் தாதிகளுடனும்.
குடும்பத்தாருடனும் ,பார்வையாளர்களுடனும்
அனுதாப் பேச்சுக்களுடனும்.!
பிறப்பின் விதையில்
மரணப் பயிர் -முளைக்கிறது.!
போட்டிப் பூக்களும் பொறாமைப் பூக்களும் ,
வஞ்சகக் பூக்களும் ,
சூது வாதுப் பூக்களும் , பலவண்ண
குனப்பூக்களும் , பேய்களும்
பிசாசுகளும்
என் படுக்கையைகிழித்து
ஏளனமாய்ச் சிரிகிறது.!
மனதுக்குள்
விதி சதியாய் மாறிப்
போராடுகிறது.!
வாழ்வில்
துன்பங்களும், துயரங்களும்
மட்டுமே
கவலையின்றிச்
உடம்பினைச் சுமக்கின்றது !

அல்லாஹ்வே அருள்




மனதில் மகிழ்வும் முகத்தில் சிரிப்பும் 
மண்ணில் அமலும் மறுமையில் நன்மையும் 
பெறும் படியாய் நல்லருள் தருவாய் 
பொழிவாய் அல்லாஹ்வே அருள் !

புனிதம் மணக்கும் ஹஜ் ..!


மண்ணுலக வாழ்வில் முஸ்லிம் ,
மாந்தரைப் புனிதம் பண்ணும்
புண்ணியம் ஹஜ்ஜுக்கு குண்டு
புரிந்தவர் கின்பம் உண்டு ..!
பாவத்தை யகற்றி நெஞ்சை
பாலென மாற்றும் ஹஜ்ஜை !
தாபமாய் தரிசித் தோர்கள்
தரனியில் ஹாஜி யாவர் !
இஸ்மாயில் நபி செய்த
இணையிலா தியாகந் தன்னை
புஸ்பமாய் மணக்கக் கண்டு
பூரிப்பார் ஹஜ்ஜில் தானே !
சத்தியம் வாழ்வில் கண்டு
சந்ததி தழைக்கச் செய்து
நித்திய இன்பம் தந்து
நிலைப்பது ஹஜ் நன் நாளே
ஆடைகளை புதிதாய் பூண்டு
அகந்தனில் மகிழ்ச்சி பூண்டு
வாழுவோர்க் கருளும் நெஞ்சை
வழங்கிடும் ஹஜ் நன் நாளே !
ஸம் ஸம் தண்ணீரை மாற்றி
தவச் சுகம் தன்னில் நீந்தி
இம்சையே இல்லா வாழ்வில்
ஈ ந்திடும் ஹஜ்ஜே வாழி ..!

01-அல்லாஹ்வின் அருட்கொடை தனிலே அருளுண்டு
ரப்பில் ஆலமீன் ரஹ்மத்தாலே - நல்ல
வரங்கொண்ட வல்லோன் அருள்மறை ஓதுகின்ற
நாவல்லவோ தீனுல் இஸ்லாம் !


02-இல்மை கற்பிக்கும் இதயம் வேண்டும் இறைவனே 
அருளை தந்தான் அல்குர்ஆணை; இறக்கினான்
அறிவினை தொலைக்காதே அல்லாஹ்வை தொழுதுபார் !
சுஅரபா நாள் ! அல்லாஹ் தந்த ஹஜ்ஜு நாள் !


03-
அரபா நாள் ! அல்லாஹ் தந்த ஹஜ்ஜு நாள் !

.மனம் மகிழும்நாள் ! மக்கா நகரில் 
மானிடர் வரவைக் கண்டு களிக்கும்நாள்!
எண்ணி லடங்கா ரஹ்மத் .

இறையின் சிறப்பு !


மகத்து மண்ணில் ஸம் ஸம் ஊற்றில்
நாவினை சுவைக்கும் நீர்!
மக்கள் நிறையும் மக்கமா நகரில்
ஹஜ்ஜினை நிறைவேற்றும் ஹாஜி
சபா மர்வாவில் ஓடும் தொங்கோட்டத்தில்
மாறிடும் வியாதியின் தொல்லை !
வெள்ளை ஆடையில் காபன் உடையில்
மரணத்தை நினைக்கும் உயிர் !
ஈமானிய நெஞ்சத்தில் இனிமையான உணர்வு
படைத்த இறைவனுக்கு நன்றி !
மறுமை வாழ்வில் மண்ணறை வாழ்க்கையில்
தெரியும் இறையின் சிறப்பு !