செவ்வாய், 25 நவம்பர், 2014



இறை படைப்பின் தொப்புள் கொடிகள்
வாழையடி வாழையே குட்டியிட்டு நிறைந்தது
தாய் கருவின் விதை நிலத்தில்
சிசுக் குழந்தைகள் தரித்து - பிள்ளை வரம் தரும்
சந்தோசத்தின் எல்லையிலே குருதியை பாலாக்கி
உணவாய் கொடுத்து தேகசுகம் பெறுவேன்
மனமோ நிறைந்த இனிமையது.....!

யாருக்கு உதவ இங்கே மனிதநேயமுண்டு;
பணத்தை தேடுவதில் ரொம்ப போராட்டம் !
இருப்போருக்கு கொடுக்காதே! இல்லாருக்கு கொடுப்பதே!
தவமெனக் கொள்ளத் தகும்


குறைகளில்லாத மனிதர்கள் இல்லை
நோய் இல்லாத உறுப்புகளும் இல்லை
எதையும் தாங்கும் இதயமுள்ளவர்களாக நாம் இருக்கிறோமா?
நிம்மதி கடல் அலையாய் விடாது தொடரும்,
பொறுமையாய் எதையும் தாங்கி வாழ்பவர்களுக்கு....!

நாடி அல்லாஹ்வை தொழுதார், அவனருளைத்
தேடி; ரஹ்மானே உன் குர் ஆனை  - ஓதி
உருகும் அடியாரை காப்பாற்ற வந்த
ரப்பில் ஆலமீனே  சுகத்தை கொடு.....!

தொழுதிடு உள்ளத்தால், இறையருள் வணக்கத்தில்
வாழ்ந்திடு , திக்ர் தவராமல் - செய்திடு
நாடி கேட்கும் வரமெல்லாம் தானடையத்
தேடி வரும் அருள்.....!


வாழ்க்கையது பொய் ; உறவுகளது பொய் ;
வாழ்வது பொய் ; மரணப் படுக்கை
தேடி வருபவர்  யாரெவர் சொல்? வராத யெவரும்
உலக ஆசை மறந்து வாழ்....!


எவ்வளவுதான் செலவு செய்தாலும்
சுகம் தராமல் தேங்கி நிற்கும்
விருப்பமில்லா இருமல் ஒன்று !
மரணம் ஒன்று
வாழ்க்கையை எச்சரிக்க
தாய் பிறப்பிக்கின்றாள் குழந்தை !
மறைத்துவாழ்கின்றேன் நலமென்று
கேட்பவர்களிடமெல்லாம்
விதி செய்த சதி !
இதய மெங்கும்
தவம் கிடைக்கிறது
உன் அன்பினை நாடி !