பட்டுக்கன்னம் தொட்டுக் கொஞ்ச இட்டமில்லையோ?
கட்டழகி என்னைவட்ட மிடவில்லையோ?
தொட்டுத் தொட்டுப் பேசிக்கிட்ட வரவில்லையோ?
எட்டி நின்று பார்க்கும் நேரம் நட்டமில்லையோ?
எட்டு இரு வயதுப்பெண் சிட்டு அல்லவோ?
பட்டுப்பூச்சி சிட்டைத் தேடி வரவில்லையோ?
தட்டுத்தடு மாறி நிலை கெட்ட தென்னவோ?
சுட்டும் விழிச் சுடர்பட்டுத் தவிப்பில்லையோ?
ஒட்டி உற வாடக்கட்ட ளைக்களுமுண்டோ?
கட்டித்தங்க மிவள் வட்ட மதியல்லவோ?
பொட்டு இட்டுக் கூந்தலள்ளிக் கட்டவில்லையோ?
பூஞ்சிட்டிவள் கரந்தொட்டுப் பேசவில்லையோ?
பட்டிக்காடோ ?பட்டணமோ? பதிலெதுவோ?
கெட்டித்தன மாவதற்க்கு மனமில்லையோ?
சுட்டிப் பெண்ணைக் கட்டிக் கொள்ள நினைவில்லையோ?
சட்டம் ஏதும் உண்டோ? வீண் சங்கடமுண்டோ?
பெட்டைக் கோழி அழைப்பதைத் தட்டலாகுமோ?
தொட்டுத்தாழி கட்ட நகை நட்டு வேண்டுமோ?
மொட்டுமல ராவதற்க்குத் "துட்டு"வேண்டுமோ?
பெட்டையர்க ளென்றால் என்ன "மட்டம்"ஆகுமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக