ஞாயிறு, 12 மே, 2013



உன் வாசமே என் சுவாசமாக,
உன் நினைவே என் எண்ணமாக,
உன் வண்ணம் என் ஒளியாக,
உன் அன்பு வாழவைக்குது என்னை.


சூரியகாந்திப்பூவாக உன்னையே சுற்றும் என் நினைவுகள்,
நிஜத்தைக் காணாது நிலைகுலைந்து துடிப்பதை நீயறிவாயோ ?


திறமையும் , அயராத உழைப்பும் ,நல்ல சூழலும், உயர்வினைத் தரும்

உலகின் அனைத்து அன்னையர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்......!




பத்து மாதம் சுமந்தே என்னைப்

பரிவுடன் வளர்த்தவள் அன்னை!

இத் தரை தன்னில் இவளருந் தியாகம் 

எழுந்தே தொட்டிடும் விண்ணை !


கண்ணே ! என்று இமையைப் போலவே

காத்திருப்பாள் இவள் நிதமே !

பொண்ணே என்றும் பூவே என்றும்

பொழியும் அன்போர் விதமே !


ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து)

இனிதாய் வளர்த்த உள்ளம்

தோயும் அன்புச் சுடராய் என்னைத்

துலங்க வைத்தாய் உய்வோம் !


பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே

பண்பாய் அனுப்பி விடுவாள்

வெள்ளி பூத்தே விடியும் வானாய்

விளங்க அனைத்தும் இடுவாள் !


பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்

பாரினில் துலங்க வைத்தாள்

தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்

தூய உள்ளம் அன்னை !


உதிரந் தன்னைப் பாலாய் உதிர்த்து

ஊட்டி வளர்த்தவள் அன்னை

இதயத் தரையில் வாழும் உள்ளம்

இவளை மறேவேன் மண்ணில் !

வியாழன், 9 மே, 2013



சொற்களால் 
கல் வீசி அடித்தாள் 

தொலைந்தபணம் போல 
மனதெல்லாம்
நிம்மதியின்றி சோகமானது 

வார்த்தைகளின் தாக்குதலால்
சிதறிப் போன குருதி போல
மனப்புண் வாங்கியது இதயம்







என் உள்ளத்து உணர்வுகளில் கசிந்து
ஊற்றாய் சுரக்கின்றது கவிதை !

எழுத்துக்களின் எண்ணிக்கைகளுடன்
போராடிக் கொண்டிருந்தேன்!

இப்போதான் மனசு ஆறுதலடைகின்றது
பேனா -
சுமைகளை சுமப்பதால் !

நிம்மதி தேடி நிம்மதி தேடி
அலுத்துப் போய் அழைக்கிறேன்!
உலகம் -
என்னைப் பார்த்து சிரிக்கின்றது
நான்
உலகத்தைப் பார்த்து சிரிக்கின்றேன்

கண்ணெதிரே பெண்களின்
பெண்மை தொலைகிறது
அவமானம் நடக்கின்றது



பொறுமையை இழக்காதே
பொறுமையலாருடனே-
அல்லாஹ் இருக்கின்றான்


பெண்ணின் பெருமையைதாங்கியே
உலகம் -
பெருமைபடுவதை காண்கின்றேன்


இன்னும் !இன்னும் !

பெண்மை பாதுக்காக்கப் படவேண்டுமென்கிகின்றது
புனித மறை

பெண்மை
எப்படியென்று புரிந்தாயிற்று !
நல்லது கெட்டதுஅறிந்தாயிற்று !!
அல்லல்களும் அவமானங்களும்தெரிந்தாயிற்று !!!

இனித் தான்
தைரியமாய் தலை நிமிர்ந்து வாழப் போகின்றேன்

வாழ்க்கையை
மனசு கற்றுக் கொண்டது
பெண்மை உணர்ந்து கொண்டது !
 


ஒழுங்கின்றித் தருபவரும் 
பிழைப்பிற்கு வழியற்றுப்,
பெரும் பாவம் புரிபவரும் 
சளைக்காமல் வாழுகின்ற 
சந்தோஷ நேர முண்டு !


நாளை வரும் என்று மனம்
நம்பிக்கை கொண்ட தெலாம்
பழாகிப் போன தந்தோ
படித்திட்ட மாந்த ரெலாம்
ஏழைகளை எந் நாளும்
எரிச்சலுடன் நோக்குகிறார் !


நாட்டிற்கு முது கெலும்பு
நா மென்று வார்த்தைகளால்
பாட்டிசைத்து வாழுகின்ற
பாவிகளே எங்களது
வீட்டிற்கும் பணம் தேவை
வியர்வைக்குப் பணம் கொடுங்கள்!



சுடு காட்டுத் தணல் வீசும் 
இந்த பெண்ணிணத்தின் அக்கினிக் கிடங்கை 
இன்னும் நாம் காவிக் கொண்டு 

பெண்ணினத்துக்கு 
பயவுணர்வுகள் உரசுவது 
இந்த சில வலிசல்கலால் தான்

கையினில் -
உயிரைப் பொத்தியும்
ஏதோவொரு அத்தரிப்பில்


சதை சப்பி உமிழ்ந்து
குதறுவதான கனாக்களோடு
புரளுகிறது இரவுகள்


மீந்திருப்பவைகள்
விழி நீர்க் கசிவுகளும்
மாயைகளுமாய் .....

ஒருமித்துப் போராடுவோம்
இனி
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையேல்
நிம்மதிக் காற்றினை
உள் வாங்கிட -
அண்ட வெளிசென்றாவது
முண்டங்கலாக்கிடபயிற்சி பெறுவோம்


கலையுலகப் பயணத்திலே -சகீ உன்றன்

அன்பினைப் பெற்றிருந்தேன்

பிறந்த மண்ணிலே உன்றன் கரம்

பிடித்து நடந்திடக் கற்றிருந்தேன்


தடுத்தடுமாறி நடந்தவுடன் -உனக்குநான்

தொல்லை தந்து வந்தேன்

குதலை மொழிபேசியவுடன் உன்னருள்

போதனையைக் கற்றுத் தந்து விட்டாய்



உயிர் மூச்சின் மேலாய் - என்னைத்

சுவாசித்துப் பார்த்தவள் நீ

உனக்கும் எனக்கு முள - உறவை

எப்படிச் சொல்லி அழைப்பது ?



எனக்கு தோழியானால் -என்ன

என்றும் நீ ஆசானல்லவோ?

காலத்தின் நகர்வினைப் -மறந்து

உயிரென நேசித்திட வேண்டுமம்மா?



மனதிலே பாசம் ஊட்டி -உள்ளத்து

உணர்விலே நேசம் காட்டி

இதயமென இடம் -தந்தே

உரிமையுடன் உறவாடச் செய்வாய்


கண்ணுக்கு எட்டாத தூரம் வரை -வாழ்க்கை

மாறிடும் நானறிவேன்

சுடராகி என்னுயிரே -தினமுமே

சூரியனாய் வந்துவிடு அதுபோதும் !

மரம் வளர்க்க முன் 
மனித நேயத்தை வளர்ப்போம்

புரிந்து வாழ்வதை விட 
புரியாமல் வாழ்ந்து போவதே சிறந்தது


நம்பினோர் கெடுவதில்லை
நம்பினோரை கெடுத்தவர்கள்........?



புதைக்கப்பட்ட சில மனிதர்களின் அசிங்க விதைகளில்இருந்து தான்
மண்ணின் மேல் மனித நேயம் நச்சு மரங்களாய் வளர்கின்றது


ஒரு மன இறுக்கத்தையும் மாற்றிடும் சக்தியாக, 
மனக் கவலைகளைப் போக்கிடும் மருந்தாக 
புன்னகையும் சிரிப்பும் மனதோடு நிலைத்திருக்கவேண்டும்


வாழ்வில் வெற்றி மதிப்பை பெற்றுத் தரும் 
தோல்வி வாழ்வதற்கு பாடம் கற்றுத் தரும்


இரவும் பகலும் மாறும்பொழுது 
மனிதணும் மனமும் மாறத்தான் செய்கிறது


முனிவர்களுடைய தவத்தின் வலிமையை-விட 
பெண்களின் கற்பின் வலிமை சிறந்தது

பெண்மைகளை சிதைந்திட்ட உண்மைகள்




கறைகளை பூசி 
மறை வேதம் மறந்த
எழுத்து நர்த்தனங்கள் !

பொல்லாத வாதங்களிலும்
பொய்மையின் தழுவலிலும்
புளித்துப் போய்
புழு அரித்துப் போன
பேச்சுக்கள் ...
..
பெண்களை சுரண்டியே
அவரவர்
தரங்களை நிரணயித்த
அசிங்கங்கள்

வலிசல்களைப்
புறக்கணித்தே எழும்
எம்
புதுமைத் தத்துவங்கள்

இன்று உமதுடா ....!
நாளை எமதே ..!என்ற
எங்களின் இலட்சியங்கள் !

அன்பில்லா மனதில் மகிழ்சி யில்லை -
பகர்ந்திட மனதில் ஒன்றுமில்லை !

பிறந்தவுடன் மகிழும் மனிதன் 
இறந்தவுடண் மறந்திடுவான்

இது தான் மனித வாழ்க்கை !

அன்பு உற்றெடுக்கும் கிணறு -பாசத்தில்
பற்றெனக் கூறு !















மனிதனுக்கு இல்லாத இந்தஅரவணைப்பு
மிருகங்களுக்கு உள்ளதே !





















தீயைப் பொசுக்கும் திறன் கொண்ட பெண்ணினமே
தாய் குலத்தின் வலிமை -ஆயினும்
கற்பினை தவமாகக் காத்திடும் பண்பாடு
பெண்ணினத்தின் பெருமை (கதை ) இது!