வெள்ளி, 18 மே, 2012


உள்ளத்து உணர்வின்
வற்றாத ஊற்று

இதயக் கயிற்றால்
உள்ளத்து வாளியைக் கட்டி
உணர்வுக் குடங்களில் ஊத்து
உதிரமாகும் அன்பு ஊற்று

அள்ளிக் கொடுத்தால்
அளவின்றித் ஊறிக்
கொடுக்கும் ஊற்று

அன்பு பாசம், நட்பு, காதல்
பற்பல கனிகள் கொண்ட
அற்புத கொடிகளின் ஆணிவேர்


சூரியன் மலரவும்
இருள் மறையவும்
வழிகாட்டும் கருவி

வைத்தியரும்
பைத்தியமாவார்
முதியோரும்
வாலிபமாவார்

விட்டுக் கொடுக்கா உள்ளம் ;
எட்ட முடியாத உறவு
இணைத்துக் கொடுக்கும்

அன்புப் பெருக்கால்
நேசிக்க முடியும் இதயம்

வேதனைகளின் துயரங்களை
சுமைகளை பொறுக்கையிலே
கிடைக்கும் ஆறுதல்
தடவிக் கொள்ளும் உறவு

அன்பும் அரவணைப்பும் பண்பும் பாசமும்
உருவமிலா உணர்வு

உரிமைப் படுத்தும் முத்தம்
அன்பு மூச்சுக்களின் ச்ப்தம்;
சப்தத்தின் சுவாசங்களைப் போல
முத்தத்தின் வகைகளும் பல

பாச கிணறு
அன்பென்னும் கசிவு
ஊற்றேடுத்தால் வெள்ளமாய்
அன்பு துளிகளை கூட்டும்
நேச முத்த மழைக் கொட்டும்

அன்பின் தூது
கை பேசி
பேசிக் கொள்ள
துடிக்கும் மனசு ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக