திங்கள், 18 நவம்பர், 2013

எலும்புக் கூடுகளாய்...




வைத்தியசாலைகளில்
நோயாளர்களின் வேதனைகள் -
தலை விரித்தாடும்

நாடி நரம்புகளை
உறுப்புக்களை உடைத்தபடி
கண்ணீர் விழிகளினால்
அழுது வடிக்கும் -
மனசு !

நிச்சயம் இல்லாவாழ்வில்
எதிர்காலம் -
உறிஞ்சும் நிலமாய்
மாறிப் போகும் !
வரண்டு போகும் !!

அமைதியும் நிம்மதியும்
காணாமல் போய்விட்டதினால் ,
வாழ்வே
சோகமானாதால்
தூக்கமுடியாத சுமைகளாய்
உள்ளத்தின் உணர்வுகள்
பகலை இருளாக்கும்
இருளைப் பகலாக்கும் !

சளித் தொல்லைகள்
இருமல் பாசையால்
ஒப்பாரிவிட்டு அலறும்
தலைவலிகளை
உடம்பு -
விரும்பிச் சுவைக்கும்

கட்டில் படுக்கைகளின்
பெயர் பட்டியல்களை
மருந்துக் கலவைகள்
ஊசி மாற்றங்கள்
குத்தி பதம் பார்க்கும் !

நடுங்கி நடனமாடும்
ஜுரப் போர்வைக்குள்
தாதிமார்களின்
குளிசைகள்
வியர்வைதுளிகளை வடிக்கும்

அதே நேரம்
பிரசவ வேதனையில் துடிக்கும்
தாய்மார்களின்
கண்ணீர் துளிகள் வெள்ளமாகும்

உடம்பின் சுரப்பிகளை தடுத்து
நிரழிவு வியாதியாக்கி
சீனியையும்
இனிப்பு பண்டங்களையும்
தடுத்து நிறுத்தும் !

அழகான் மனித தோற்றம்
எலும்புக் கூடுகளாய்
பரிணாமிக்கும் வரையில்
ரணங்கள் பதிவாகும் !
உணவுகள் குறைவாகும் !!
நிம்மதிகள் தூரமாகும் !!!
கவலைகள் அதிகமாகும் !!!!
இன்னும் இன்னுமாய் !!!!!
பல பல தொடரும் ..!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக