சனி, 8 ஜனவரி, 2011

அன்பு இதயம்!!!!

நீ-
அன்பை எழுதி எழுதி.....
எனக்குள்
சிறைப்பட்டுப் போய்
நாட்கள் கரைந்து விட்டன!

நான்-
சாதாரணமாய்த்தான்
உன்னை எண்ணினேன்!

ஆனால்-
வாரத்தில் இருமுறைவரும்
உன்-
வசந்த மடல்கள்
உன் இதயத்தை
இமயமென
எனக்குப் பறைசாற்றியது!

அதனால்தானே-
என் இதயத்தோடு
இப்படி
இறுகிப் போனாய்!

ப்ரியோய்...
அன்பு தெளித்த
உன் கடிதங்களை...
நான்
அப்படியே
மனதில் எழுதிடுவேன்!
உன்னை நான்
சிறைபிடித்த வரலாறு
தூய்மையானது!

நான்-
காலத்தை நேசிக்கதாவள்;
இற்றுப் போன
சமுதாய நாற்றத்துக்குள்-
நீ மட்டும்
எப்படி...
எனக்கு
நட்பு மனம் தந்தாய்..?

நீ விரித்த
பாசவலைக்குள் சிக்கி
கனநாள்;

கனவாக ஆக்கிவிடாதே...
என்று கதறினேன்!
இன்று-
என் கதறல்
நிரந்தரமாகிப்
போய்க்கொண்டிருக்கிறது!

நீ-
 வசந்தத்தை தொலைத்திருக்கலாம்!
அன்பைத் தூக்கி வீசாதே!
அது-
ஆயுள் முழுவதும்
உன்னைக் கொல்லும்!

நிச்சயமாய்
நீ என்னை
இதயத்தில் இருந்து
அகற்றவில்லை என்பது!
எனக்கு நன்றாகத் தெரியும்

உன் இதயம்
அன்பிதயம் தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக