புதன், 5 ஜனவரி, 2011

கறுப்பு ஞாயிறு!!!!!!

டிசம்பர் -26
அது வொரு
கருப்பு ஞாயிறு

பல்லாயிரம் இதயங்கள்
உயிரற்றுப் போனதால்
கவலைகளை அனுஷ்டித்த
கருப்பு ஞாயிறு

இனிய காலை நேரத்தில்
சுகந்தம் தடவிய
நம்
தூய இதயங்களை
கடல் அலைகள்
கப்றுகளாக்கிய
சந்தோஷம்
தொலைந்த நாள்
துயரம் நிறைந்த நாள்!

உறவுகளின்
பிரிவுகளினால் -அந்த
ஞாயிருனை
நினைக்கும் போதெல்லாம்...

உயிர் மூச்சுக்களில்
சுவாசித்துக் கொண்டிருக்கும்
வேதனையின் துளிகள்
அலறிக் கொதிக்கும்...
ஆவியாய் பறக்கும்

அன்றைய தினத்தில்
 மரஞ்...செடி...கொடி...
காற்று...மழை...வெயில்...
வானம்...பூமி...
அனைத்தும்
மௌன அஞ்சலி செலுத்தும்
மேகங்கள்
காரிருளாய் மாறும்!!
எம்
இதயங்கள்...உறவுகள்...
சொத்துக்கள் ...சுகங்கள்....
வீடுகள் ...வாசல்கள்...
எல்லாமே...
சுனாமி காட்டிய அட்டூளியப் பிரளயத்தில் 

கல்லறை சமாதிகளுக்கு
நான்
பிராத்தனைப்  பூக்களை
சொரியும் வேளையில்...

உறவினர்கள் சிலர்
குர்ஆனை
தமாம் ஆக்குவதற்கு
தொப்புள் கொடி உறவுகளை (தேடி)
செல்கின்றனர்

இறை அற்புதங்களை
அறிந்து கொள்வதற்கு
சுனாமியின் நினைவூட்டல்கள்
மரணத்தை ஞாபகமூட்டும்

கறுப்பு ஞாயிறு
மறுமையின் பலன்களையும்
இம்மையின் தேடல்களையும்
கற்றுக் கொடுக்கட்டும்

இறைவா!
இயற்கை அழிவுகளினால்
தொடர்ந்தும்
எம் மண்ணுக்கு
சோதனைகளை தந்து விடாது
காப்பாற்றி யருள்  புரிவாய்!!
என்ற
பிராத்தனையின்
ஜனிப்பில் ஜீவிக்கின்றோம்!
அல்ஹம்துலில்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக