புதன், 5 ஜனவரி, 2011

பிறந்த பிரக்ஞை!

மனம்
சிதைந்து போகிறது 
கொஞ்சம் கொஞ்சமாக!

உயிர் பாக்கி 
உறுப்பு என்பது இரும்புத் துண்டா.........?

வயசு-
கூடிப்போக வேண்டிய மாற்றம்.
பத்தோடு எட்டு 
பதினெட்டா. ...?

சரியாகத் 
தெரியவில்லை!

தலையின்
கறுப்பு முடி 
நரைத்துப் போகிறது
தினம்! தினம்!!!


நிரந்தரமற்ற 
மனித வாழ்வு 
கலங்கும் அவலம் 
இங்கு.....

ஷெல் வீச்சால் 
காயப்பட்ட 
பார்வதியின்
முகம் மறந்து 
நினைவு சிதறுகிறது
கனவில்.

அங்கம் துண்டிக்கப்பட்ட 
 பாணணாய்த் துடிக்கிறது
பிறந்த  பிரக்ஞை!

சமாதானத் தென்றலின்
தடவலை
அவ்வப்போது சுவாசிக்கையில் 
பாட்டியின் மூச்சு
அடைபட்டு 
உயிர் பிரியத் துடிக்கிறது.

முகத்தில் சொட்டுப் புன்னகை.........

போராட்டம் நிறைந்த
நாட்களில் அழிவை மட்டும்
நினைக்கையில் 
மனம்-
சிதைந்து போகிறது
கொஞ்சம் கொஞ்சமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக