புதன், 5 ஜனவரி, 2011

கன்னியே கவனம்!

ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!

குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!

இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!

பாதைதனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!

காதலெண்டால் கரும்பாவான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலே விலகிடுவான்!

காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக