வெள்ளி, 18 மே, 2012

தோழி
வானத்தை முத்தமிடா பூமியைப் போல
நீ- எனக்கு
உறவாய் கிடைத்தாய்...!

ஆனால் -நீயோ ,
தூரத்து தண்ணீர் தாகத்துக்குஉதவாதென்று
சொல்கிறாய்!

பிறகு -ஏன்
எனக்காக
உன் கண்ணில் நீர்?.
அவளோடுபேசும் போது

சொல்ல நினைக்கிறேன் ...

அவள் பார்க்கும் போது

சொல்ல நினைக்கிறேன் ...

அவள் என்னை நேசிக்கும் போது

சொல்ல நினைக்கிறேன் ...

அனால் சொல்லமுன்
 

அவள் யாரென்று பார்க்க

முடியவில்லை !!!

இறைவா

எனக்கு சீக்கிரம்

பார்க்கும் சக்தியை கொடு ...

அவளை யாரென்று பார்க்கவேண்டும்
சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கும்
உயிர் பலிகளுக்கும்
விலையேற்றங்களுக்கும்....
போராட்டங்களுக்கும் மத்தியில் களித்த
அந்த.....
சோக நாட்கள்...!

இன்னும் இன்னும்
கடல் அலைகளாய்
மனக்கரையை.....
தினம் தினம்
அரிக்கின்றன....!

உயிர்- தான் உடலெங்கும்
அச்சத்தை போ(ர்)த்திக் கொள்கிறது!

மனம்
வேதனையில் துடித்து
கண்ணீர் விட்டு
கொதித்து அலர் நின்றது...!

வாழ்க்கை-
விரக்தியில்மாறி
சஹாராப் பாலைவனமாகின்றது...!

வயது-
கிழிக்கும் கலண்டர்தாள்களின்
திகதிகளினால்
முதுமையை தடவுகின்றது...!

இளைஞர்கள்-யுவதிகள்
கிழவன்-கிழவிகள்
சின்னஞ் சிறுசுகள்
படித்தவர்கள்-படியாதவர்கள்
ஏழை-பணக்காரர்கள்
பத்திரிகையாளர்கள்-எழுத்தாளர்கள
இப்படி....இப்படி...
தொடர்ந்து... தொடர்ந்து...
இவர்களின் நிலைமைகள்....
அசம்பாவிதங்களின் இருளுக்குள்....
காணாமல் போகின்றது!
தாக்குதல்களின் கொடூரங்களுக்குள்
மண்ணாகிப் போகின்றது!

உறுப்புக்கள் சில
கால்கள் வேறாய்....
கைகள் வேறாய்...
தலைகள் வேறாய்....
ஏன்....?
அங்கினங்களாய்
உருக்குலைந்து
காகம்...
நரி....
நாய்....
பேய்களுக்கு உணவாய் மாறுகின்றது...!

பிறந்து வளர்ந்த
அந்த இருப்பிடம்
தாக்குதல்களால்
காணாமல் போனது....!

அதோ...
அந்த ஷெல்தாக்குதலில்...
கன்னி வெடியில்....
துப்பாக்கிச் சப்தங்களில்
கிழக்கு மண்ணின் நிலைமை....!

தற்போது-
ஊரடங்குச்சட்டம்
ஆமாம்-
ஈக்களும்
புழுக்களும்
ரோந்து செல்கின்றன.

மனிதர்களுக்குப்-
பதில்
மண் மூடைகள்....!

ஆனாலும் என்ன....
சமாதானம்
பேசப்படுகின்றது
தாக்குதல்கள்

அதிகரிக்கின்றன
உரிஞ்சும் நிலமாய்....!

உள்ளத்து உணர்வின்
வற்றாத ஊற்று

இதயக் கயிற்றால்
உள்ளத்து வாளியைக் கட்டி
உணர்வுக் குடங்களில் ஊத்து
உதிரமாகும் அன்பு ஊற்று

அள்ளிக் கொடுத்தால்
அளவின்றித் ஊறிக்
கொடுக்கும் ஊற்று

அன்பு பாசம், நட்பு, காதல்
பற்பல கனிகள் கொண்ட
அற்புத கொடிகளின் ஆணிவேர்


சூரியன் மலரவும்
இருள் மறையவும்
வழிகாட்டும் கருவி

வைத்தியரும்
பைத்தியமாவார்
முதியோரும்
வாலிபமாவார்

விட்டுக் கொடுக்கா உள்ளம் ;
எட்ட முடியாத உறவு
இணைத்துக் கொடுக்கும்

அன்புப் பெருக்கால்
நேசிக்க முடியும் இதயம்

வேதனைகளின் துயரங்களை
சுமைகளை பொறுக்கையிலே
கிடைக்கும் ஆறுதல்
தடவிக் கொள்ளும் உறவு

அன்பும் அரவணைப்பும் பண்பும் பாசமும்
உருவமிலா உணர்வு

உரிமைப் படுத்தும் முத்தம்
அன்பு மூச்சுக்களின் ச்ப்தம்;
சப்தத்தின் சுவாசங்களைப் போல
முத்தத்தின் வகைகளும் பல

பாச கிணறு
அன்பென்னும் கசிவு
ஊற்றேடுத்தால் வெள்ளமாய்
அன்பு துளிகளை கூட்டும்
நேச முத்த மழைக் கொட்டும்

அன்பின் தூது
கை பேசி
பேசிக் கொள்ள
துடிக்கும் மனசு ...!
மனசு நிறந்த
உறவு-
மனவிட்டு மனம் தாவினால்
அது துயரில்
வாடித் துடிக்கும்...!

உணர்வில் கலந்த நட்பு
உணர்ந்து பார்க்கத்
தவறினால் அது
பிரிவை நோக்கும் ..!

உண்மையான நட்பை உயிராய் மதித்து வாழ்
கால் தூசாய் மிதித்து வாழாதே...!
மரமே
உன்னைப் போலவே
இழைகள் இன்றி
பட்டுப்போன கிளைகள் போல தான் -நானும்
என் மனமும் ...!

சந்தோசம் எல்லாவற்றையும்
இழந்து
உன்னைப் போலவே நானும் ...!
என் மனமும் ...!
ஓதும் திருமறை கூறும்
நல்ல பயன்கள் பெரு ..!
சூழும் வறுமை நீங்கும்
தாழ்வு மனப்பான்மை மாறும் ...!

மனம் எனும் சுவாசம்
உன்னிடம் தூய்மை நாடும்

அடித்தாலும் பிடித்தாலும் நட்பு
நடித்தாலும் நகைத்தாலும் நட்பு
வெட்டினாலும் துளித்து வளரும் மரமே நட்பு
அள்ளினாலும் குறையாத் ஊற்றே நட்பு

அன்பு எனும் ஒளிச்சுடரும்
பல்விதமாய் எங்கும் படரும்
ஒருவர் பின் ஒருவராய் தொடரும்
தொடர் சங்கிலி போல் நீளும்
உறவை பாசத்தை ; துய மனதைப்
பெற்றதை ஒப்பித்தல்!

உள்ளம் எனும் பூஞ்சோலை
எழில் கூட்டிடும் உன்நேசம்

பற்றும் பாசமும் ; அன்புக்கு
அமுதாய்த் தேவை

உறவை தேடும் உன்னை
இதயம் தேடி வருவாள் முன்னே

உள்ளத்தின் ஒளி அறியும் கலை
பள்ளத்தினின்றும் வெளிவரும் நிலை..!
அதிசய கடியாரம்

ஆனந்த கடியாரம்

இறைவன் படைத்த கடியாரம்

இன்பமாய் ஓடும் கடியாரம்



ஓடிடலா மது பல்லாண்டு

நின்றிடலாமது மறு கணமே



அன்று வரை காத்திராதே

இன்றே செய்

நன்றே செய்

இன் சொல் பகிர்ந்திடு

வன் சொல் தவிர்த்திடு

வாழ்ந்திடலாம் இன்பமாய் நீ

ஓடிடும் வரை அக் கடியாரம்

உன் அன்பு சொற்களின்
வார்த்தைகளால் நான் வாடி துடித்தபோது
நீ அடைந்த வலியை விட
நான் துடித்த வலி அதிகம் தோழி

இதயத்தில் இருப்பவளின்
வாயில் இருந்து இடறி விழும்
ஒரு வார்த்தையும்,
எரியும் நெருப்பை விட
உஷ்ணம் கொண்டது என
நான் இதயம் வெந்து
அழதபோது புரிந்தது தோழி

உள்ளத்தில் வாழும் என்னுயிரே
புரிதலின் சிறு பிழையால்,
என் இதயத்தில் நுழைந்த
உன் வார்த்தையால்
நான் துடித்த துடிப்பை நினைத்து
கண் கலங்கி, உயிர் துடிக்க அழுகின்றேன் தோழி

மன்னிப்பு என்ற வார்தையால்
எனக்கு மருந்திட உன்னால் முடியாது
என்று தெரிந்தாலும்
மனம் நொந்தது கேட்கிறேன்
மனதினை நோவினை செய்திடாதே தோழி ...!
உம்மா...
உன் ....வளர்ப்பு
கருவறையின் பிறப்பு ..!
காற்றும் கூட...
இடைபுக முடியா....
உன் பாசம் .
என் சுவர்க்கம் !


நான்..
உயிராய் வளர...உன் வயிறு தந்தாய்..

சுவாசமாய்
உன் மூச்சு தந்தாய்

உணவாய்..
உன் உதிரம் தந்தாய்..

என் உயிராய்
நீயாகினாய்...

நானாகவே..இங்கு..
நீ மாறினாய்..!

உலகம் மறியா..நான்..
உன் வழிகாட்டலில் ....
நகர்கின்றேன் ...

உன் ஒவ்வொரு..
அசைவிலும்...
உன்னை உணர்கிறேன் !

உனக்கும் எனக்கும்..
உறவையும்... உயிரையும்
தாண்டிய...
ஓர் உன்னதப் பிணைப்பு !

அது
தாய்.. பிள்ளை என்னும்...
இறைவனின் இணைப்பு !

அவனின் ...! பிறப்பு ..!
நட்பைப் பெற்றேன் மா நாட்டில் - நல்
அன்பைக் பெற்றேன் அரவனைப்பில் !
பாசத்தைப் பெற்றேன் துயவளின் - இதயம்
நிறையக் கண்டேன் மகிழ்ச்சி !

நட்பைப் பெற்றேன் முழுதாய்க் - உள்ளம்
நிறையப் பெற்றேன் உறவில் !
நிரந்தரமாய்ப் பெற்றேன் நட்பு - என்
உணர்வில் பெற்றேன் சுடரன்பே ...!!
என் உயிரே எனக்குச் சொந்தமில்லை .
இதய ஆழத்தில் நிறைந்து வாழும்
நட்பும் எனக்குச் சொந்தமில்லை .

காலை மாலை என்னைத்
தாலாட்டும் -
உறவும் எனக்குச் சொந்தமில்லை . !

இதயத்தில் அன்பு வைத்து
உறவாடிய
நட்பும் எனக்குச் சொந்தமில்லை .

எழுதினேன் உன் முக நூலில்
பல கவிதை

ஒற்றை ரோஜாவாய் நட்பு
பலர் வாழும்
இதய தோட்டத்தில் ..!

வேர்க்கும் சிறைகள் ! அங்கே நீ
போட்டாய் எனக்குப்
பூவிலங்கு !
அதுவும் எனக்குச் சொந்தமில்லை ...!

வாழும் உறவுக்கு
உரிமை காட்டி
போட்டாய்
தப்ப முடியாத
நித்தியப் பந்த விலங்கு !
அதுவும் எனக்குச் சொந்தமில்லை .

ஆத்மாவின் நட்புக்கு
எலும்பு உ டல் போடும்
ஆயுள் விலங்கு !

உன்னுடைய
உயிர் தோழி நானா ?
என்னுடைய
ஆசைத் தோழி நீயா ?

சதி பதியை எக்காலமும்
மரணத்தில் தள்ளி
உயிர் சாவியை இடுப்பில் கட்டி
பல்லாங் குழி ஆடிவரும்
பொல்லாத விதி !
அதுவும் எனக்குச் சொந்தமில்லை ....!