ஞாயிறு, 25 செப்டம்பர், 2011
நேர்மையின் விலகல்கள்
உண்மைகளை மறைக்கும் ...
போலி வேஷங்கள்
நாசத்தின் கருவாகி
நடைபோடும் ....
தொடர்பறுநத
சுகங்களைத் தேடி
மனித உயிர்
மண்டையைப் பிளக்கும்
வாக்குகளை வாதமாக்கி
உலகியல்
ஞானம் புதைக்கும்..
எழுத்து வீரம்
எளிதில் மறையும்
நிறமாறுதலும்
நெளிந்த கோஷங்களும்
நேர்மைப் பிளமபில்
கருகிப் போக _
கவிதை பிறக்கும் ..!
பெண் _
யுகத்தின் படிப்பு
சந்திர மண்டலத்தில்
காலடி வைக்கப் போவதையிட்டு
மண்டைகளை உருட்டிய படி
முதுமை ஜீவன்கள்
கொள்ளை புறத்து வாசலில்
தாரகை மந்திரமோதும் ..!ச
"வெற்றிலை" வட்டாக்களில்
பாக்குகள் ஜில்வோலையடிக்கும் ..!
சிவப்பு வாய்கள்
எச்சில் சொற்கள் கொட்டும்
உதயத்தாரகை இதழ்களில்
புதுமை பெண் _தன்
புலமை திறன்களை
புகைப் ப டங்களில்
வாரியிரைத்துக் கொள்ளும் ..!
வீ ட்டில் ராகமிசைக்கும்
வானொலிச் செய்திகளின்
தலைப்புத் தூறலினால்
மனசு _
மகிழ்சிக் குடை
விரிக்கும் ...!
அறிவிப்பாளர்களின்
கை -தட்டல்களால் :
குயில் குருவிகளின் -
இன்னிசை சப்தங்களில் ..:
சோம்பரிக் கரங்கள்
நெட்டி முறிக்க ..
கை தூக்கி விரல் அசைக்க ...:
சுறு சுறுப்பு
சூரியனாய் உதிக்கும் ..!
பணக்கார சிட்டுக்களில்
சில ..
பாராட்டுககளினால்
மாலை போட :
சிலதுகள்
சந்தோசத்தில்
முகம் மலர ..:
பலதுகள்
விமர்சனங்களில்
பார்வை செலுத்தும் ..!
பெண்களின் முன்னேற்றங்களை
வாழ்த்திய படி
பாரட்டுத் துளிகளினால்
இதயம் கசியும் ...!
முன்னேற்றப் பூக்களுக்கு
ஆண் வண்டுகள்
பண்ணீர் தூவும்
சூரியக் கதிர்கள்
வெளிச்சம் காட்டினால்
சிந்தனைக் காற்று
என்னைத் தடவும் ..!
படிப்பு த் தொடரும் ...!
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
சோலையிலே! ஒரு ஒற்றைக் குயில்
சோகக் குரலிலே! கூவுதடி!
மாலையிலும் அதிகாலையிலும் - அது
வாடி மனம் வெந்து கூவுதடி...!
(சோலையிலே)
சின்னஞ் சிறு பராயத்திலே
சேர்ந்த துணை மறைந் தோடியது...
வண்ணக் கருங்குயில் தன் துணையை - கிட்ட
வாவென்ற ழைத்துமே கூவுதடி....!
(சோலையிலே)
கொஞ்சிக் கலந்துமே! மாமரத்தில்
கூடித் துளிர் கொய்து பாடியதும்
நெஞ்சிற் கனவுகள் கூடிடலே - அன்று
நித்தம் குளிர்ந்ததை எண்ணுதடி....!
(சோலையிலே)
சோலையிலே பரந்தொடியதும்
சொர்க்க மென ஓன்று கூடியதும்
பாலையருந்திப் பழஞ்சுவைத்தே - காதற்
பாடமிசைத்ததை கூருதடி...!
(சோலையிலே)
சொந்த அனுபவம் யாவு மின்று
சொர்ப்பன மாகவே போன தெண்ணி
வெந்து மிக நொந்து கூவுதடி - அதன்
வேதனை என்று தான் தீருமடி....?
(சோலையிலே)
ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
அழகிய விழியில்
அபிநயம் புரியும்
தேவதையே;
உன்னை அர்ச்சனை செய்யும்
நினைவுகளில்
என் ஆன்மா பூக்கிறது.....!
வெண்மதி போலே
இதயவானில் பவனி வரும்
அன்புத் தேவதையே:
உன் புன்னகையில்
நான் புதியவனாகிறேன்....!
நினைவுகளில் ஆனந்தம்
காணும்_
இந்தக் காதல்
பித்தனுக்காக
நீ ராகமிசைக்க
வரமாட்டாயோ?
காலம் கரைந்தும்
கனவாகிப் போகும்
நம் கதைகளை
நிஜமாக்குவதற்கு
துடிக்கும்
எனக்காக
நீ பாதத்தை நகரத்து....
மலர்களால் மட்டுமல்ல
இவனின் மனமே
உனக்கு
ஆராதனை செய்யக்
காத்துக் கிடக்கிறதடி.
இறையோன் அருளொளியை எழுது!
இயற்கையின் எழிலை எழுது!
உலகின் அற்புத வளத்தை எழுது!
சுரக்கும் சுகந்தம் தன்னை எழுது!
தூய நட்பு உள்ளத்தை எழுது - நண்பா
அனைத்தையும் மனம் திறந்து எழுது!
பெண்மை தனையே எழுதி - தாய்மை
பொங்கி யெழும் கருணையையேன் மறந்தாய் !
வானம் பூமியை எழுது!
ஆழ் கடல் அற்புதத்தை எழுது!
வான் பொழியும் மழையை எழுது!
தரை மேல் விழும் சுடரை எழுது!
பசி பட்டாணி பஞ்சத்தை எழுது!
மரம் செடி கொடியை எழுது!
எண்ணிலா இயற்கை அழகை எழுது!
தாய் குலத்தை வர்ணிப்பதேன்...?
கலை இலக்கியத்துள்ளே நகரும்
போட்டி பொறாமை தன்னை
கவிதை வரிகளாய் எழுது - பாரில்
எழுந்துள்ள பஞ்சத்தை எழுது!
மின்னலாய் பிரகாசிக்கும் இயற்கை
அழகினை போற்றி எழுது!
நல்லவை எல்லாம் விட்டு - எழுத
உலகினில் பெண்மையா வேண்டும்....
இயற்கையின் எழிலை எழுது!
உலகின் அற்புத வளத்தை எழுது!
சுரக்கும் சுகந்தம் தன்னை எழுது!
தூய நட்பு உள்ளத்தை எழுது - நண்பா
அனைத்தையும் மனம் திறந்து எழுது!
பெண்மை தனையே எழுதி - தாய்மை
பொங்கி யெழும் கருணையையேன் மறந்தாய் !
வானம் பூமியை எழுது!
ஆழ் கடல் அற்புதத்தை எழுது!
வான் பொழியும் மழையை எழுது!
தரை மேல் விழும் சுடரை எழுது!
பசி பட்டாணி பஞ்சத்தை எழுது!
மரம் செடி கொடியை எழுது!
எண்ணிலா இயற்கை அழகை எழுது!
தாய் குலத்தை வர்ணிப்பதேன்...?
கலை இலக்கியத்துள்ளே நகரும்
போட்டி பொறாமை தன்னை
கவிதை வரிகளாய் எழுது - பாரில்
எழுந்துள்ள பஞ்சத்தை எழுது!
மின்னலாய் பிரகாசிக்கும் இயற்கை
அழகினை போற்றி எழுது!
நல்லவை எல்லாம் விட்டு - எழுத
உலகினில் பெண்மையா வேண்டும்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)