வெள்ளி, 13 ஜூலை, 2012

என் தங்கையே ,
நீ என்னோடு பேசாத போது
மனதின் வலி கூட தெரியவில்லை

ஆனால் -நீ
நேற்று என்னோடு பேசிய போது
என்
இதயத்தின்
துடிப்பு கூட வலிக்கின்றது ..!
நம்பிக்கைகள்
சில நேரம் ஏமாற்றிவிட்டு
என்னை விட்டு நகர்கின்றது


நாம்
நம்வார்த்தைகளை

கொட்டிய பிறகுதான்

வேதனைகளை புரிந்து கொண்டு

நிதானமுடன் நடக்கிறோம்..!



சிலருக்கு

ஒரு சில நட்பு மேலாகப்படுகின்றது

உண்மையாய் நேசிப்பவர்கள்
கீழாகமதிக்கப் படுகிறது

எனக்கு இவைகளைப் பற்றி

கனவுகளும் இல்லை
நினைவுகளும் இல்லை
கவலைகளும் இல்லை
வேதனைகளும் இல்லை ...!
என் ஆசைகள் நிறைந்த இதயம்

கப்ரை நோக்கி நடைபயில்கின்றது

மூச்சை விட்டு நகரும்

சுவாசங்களாய் ...!
உலகில் பூக்கும் பூவெல்லாம் வாடி உதிரலாம் ஆனால்
தூய நட்பு என்றும் உதிர்ந்து வாடாது ...!
மனதில் சந்தோஷம் வேண்டுமென்றால்
இதயத்தில் அன்பை வளர்தது விடு ...,
ஆனால்,
சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்
நட்பை நேசித்துப் பார் ...!
உன் நட்பு உள்ளத்தில்
சிறை கைதியாகி விட்டேன்.
தோழி ..,
தவறுகள் செய்தால் மன்னித்து விடு
அல்லது தண்டித்து விடு...!
ஆனால்
பிரிந்து போய் விடாதே
என்னை
விடுதலை செய்து விடாதே....!
என்றும் நான்
விரும்பி
யார் மனதையும்
அன்பால் தொட்டது இல்லை!

எப்போதும்
யார் நினைவிலும்
வாழந்து போக விரும்பியது இல்லை !

இதுவரை
யார்
மனதையும் உரிமையாட
நினைத்ததும் இல்லை!

நான் நானாகத் தான்
இருந்தேன்.
உன்னைக் காணும்
வரை!
உன் அன்பை பெறும்
வரை!
உடம்பின் அழுக்குகளை கழுவிக் கரையும்
சவர்க்காரம் போல்

தன்னையே தியாகம் செய்து விட்டு
சுத்தத்தை மட்டும் சுகமாகத் தந்து விட்டுச்
செல்வது - போல்

சகீ-
உன் சந்தோசம் நிறைந்த சுகங்களை எல்லாம்
நீயே வைத்துக்கொள்...!

உன் துயரங்கள் நிறைந்த சோகங்களை மட்டும்
எனக்கு பரிசாகத் தந்துவிடு

உன் உண்மையான உற்ற தோழி
நான் என்றால்!
சுடரொளி

- கலைமகள் ஹிதாயா றிஸ்வி -

ஆதாரமாய் ...அனுதினமும்..
பெயர் சொல்லி அழைக்கும்..உறவு ...

உயிரைத் தடவும் உயிர் ...
உள்ளத்தை தழுவும் உறவு ..

வயிற்றுக்கும் ஊட்டும் உணவு ..
உயிர்க்கும் ஊட்டும் உறவு

உடம்பை அணைக்கும் பாசஊற்று
துன்பத்தை துரத்தும் உறவு ..

செல்வத்தை தரும் அருளொளி
மனதால் . மகிழும் உறவு .

இருளகற்றும் சூரியஒளி
உள்ளத்தை தழுவும் ..உறவொழி..!

ஒளியற்ற இவ்வாழ்வை .
விழி திறந்த மனிதனாய்

சூரியனாய் பிரகாச வைக்கும்...சுடரொளி
ஒளியில்லா உலகம் விழியில்லா முகமாக
அன்பினை வடித்திடும் ..தந்தையெனும் சுடரொளி!
என் இதயம்
சில -
எதிர் பார்ப்புக்களோடு
காணாமல் போய் விட்டது


பிராத்தனை பிராத்தனையாய்
பல்லாயிரம் பிராத்தனைகள்
தாயாரின் மறைவுக்குப்பிறகு..!

எதற்கும்
அழாத என்னை
அழச் செய்துவிடுகின்றது
வருந்தச் செய்துவிடுகின்றது
உறவு ..!


நான்
கடைசியாகச் தாயாரைப்
பார்த்த போது

'என்மகளை என்னோடு கூட அனுப்பி விடு’ என்று
அல்லாஹ்விடம் பிராத்தனை செய்துயிருந்தால்
இன்று-
நான் உன்னோடு வந்திருப்பேன் தாயே


பிள்ளைகளுக்காய் தாய் கேட்க்கும்
பிராத்தனைஅங்கிகரிக்கப் படுவதுன்டு


எந்நிலையிலும்
அழாத என்னை அழவைத்துவிடுகின்றது
வேடிக்கைப் பார்த்துவிடுகின்றது
உறவின் பிரிவு
குட்டிச் சண்டைகள்
நம்மை ஒட்டிக்கொள்ள.,

எழுத்தின் வரிகள்
தொட்டுக் கொள்ள
பேசலாம்
நட்பின் மகத்துவம் ...!

அன்பின் உணர்வுகள்
சுவாச மூச்சுக்களில்.

உன் இதய உணர்ச்சிக‌ளில்
பாசத் துளிக‌ள்.

முக நூல் போதும்.
இருவ‌ரும் அமர்ந்திருக்க

நேரத்துக்கு வ‌ந்தால்
ந‌மக்கு தகவல் ம‌ழை.

எழுத்துக்களும் கருத்துக்களும்
மோதி மோதி ஒன்றான‌து.

பார்வைகளின் வரியில்
விமர்சனத் துளி

ந‌ம் தொடர்பே கண்ணாடி
அது
முகம் பார்த்து அழுதது ..!.

உள்ளத்து தோட்ட‌தில்
நட்பூக்களின் சிரிபபு (பூ )...!
பெண்ணுக்கு உரிமையை மறுத்து விட்டு
பேசிய உலகத்தில் இன்று நாங்கள்
கண்ணுக்கு நிகராக அவரை இன்று
காதலித்துப் போற்றுகின்றோம் அவர்கள் வாழ்க!!!
விண்ணுக்குக் கூடவே பெண்கள் கீர்த்தி
விமானத்தில் பறந்தங்கு சென்ற தாவே
மண்ணுக்கு புதுத்தெம்பு வந்து சேரும்
மாதர் குலம் அதைக்கண்டு மகிழ்ச்சி கொள்ளும்.

பூட்டிய கதவுகளை உடைத்துக் கொண்டு
புரட்சி மங்கையர்கள் எழுந்து விட்டார்
தீட்டுவார் புதுக்கவிதை அதிலே கொஞ்சம்
தீவிரமும் வீரமும் நிறைந்திருக்கும்
வீட்டுக்குள் படுப்பவரும் எழுந்து கொண்டு
விடிவுக்காய் குரல்கொடுக்க வந்து விட்டாள்
நாட்டிலே தமிழ்ப் பஞ்சம் குறைந்து போகும்
நான்கு புறத் திசை இருந்தும் தமிழ் முழங்கும்.

எழுத்துக்கள் எப்பொழுதும் எங்கள் உள்ள
எழுச்சிக்கு துணையாக நிற்க வேண்டும்!
அழுபவர்கள் குரல்களை அடக்கி விட்டு
ஆர்ப்பரித்து அவர் எழும்பச் செய்ய வேண்டும்!
விழுந்து கிடப்பவரை மெல்ல மெல்ல
வீரமுள்ள வீரர்களை மாற்ற வேண்டும்.
பழுது பட்டும் போகாமல் தமிழை என்றும்
பக்குவமாய் நாம் காத்து வளர்க்க வேண்டும்!
ஒரு பெரு மூச்சில்விழும் காட்சிகள் !

விழிக் குளங்கள்
கண்ணீரை இறைக்கும் !

விசனமில்லாத
முகங்களுக்குள்
விஷமேறிய தோள்களாக
சில முகவரிகள் ....!

கிடைக்காத போதும்
கிடைத்த பொழுதும்
கேள்வியையே
வெளியிடும்
மூச்சுக்குள் ...!

பாலையும் நீரையும்
பகுத்தறிந்து
நோக்கும்
அன்னமும் இதுகண்டு
அலறித்துடிக்கிறது ..!

ஓ...,
அந்த இருளுக்கும்
வேலையில்லை
மனிதர் மனங்களில் தான்
குடி கொண்டது ..!

கொடுமையும்
கொடிய பார்வையும்
என்னில்படுவதனால்
என் விழிகள்
என்றுமே ......!
யார் உன்னை நேசிக்காவிட்டாலும்பரவாயில்லை
சகீ-
உன்னை நேசிக்க உயிருள்ளவரை நான் இருக்கிறேன்

என்னை எங்கும் நீ தேடி அலையாதே நான்
உன் இதயத்தின் துடிப்பாய் இருக்கிறேன்
பாசமுடன் உன் சுவாச மூச்சுக்களாய்..!

அன்பு என்பது பகைவரை கூட நண்பராக்கும்
ஆனால்
தலைக்கனம் என்பது நண்பனை கூட எதிரியாக்கிவிடும்
அதனால்
நல்ல உள்ளங்களை மதித்து வாழ்வோம் ...!

கர்வம் காட்டும் இதயங்களிடம்
அன்பை காட்டாதே,
உன்னிடம் அன்பு வைக்கும் இதயத்திடம்
நோவினை கொடுக்காதே
எதையும் எதிர்பார்க்காதே...!

உன் அருகில் ,
உன் நினைவில்
உன் மனதில்
உன் வாழ்வில்
உன் அன்பில்,
உன் பயணத்தில்
எவர் எவரோ இருக்கலாம்.
சந்தரப்பவாதிகளாய் ..!

ஆனால் யாரும்உனக்கு இல்லாத போது
உனக்காக நான்மட்டும் தான் இருப்பேன்...!
நினைவியில் வைத்துக் கொள் ...!
பசியின் கொடுமையால்
தாய்மடிதேடி விம்மி விம்மி
ஏக்கத்துடன் துடித்து பதறி அழும்

குழந்தையைப் போல

என் மனம்-

ஆறுதலை தேடி விம்மி விம்மி அழுது துடிக்கின்றது
ஊதி நிறைத்த
பலுனைப்போல்
மனசால் -
நிறைந்து இருக்கிறேன்,..!

என்னைத் தடவிய
காற்றினை முத்தமிட்ட பின்பு!

யாரிது , மௌனக்
காரிருள் சூழ்ந்த நேரத்தில்
என் பின்னே
என்னை
நிழலாய் தொடர்ந்து வருவது?

மௌனமாய்
மறைந்திருக்க
முயற்ச்சித்தாலும்
எந்தப் பலனு மில்லை!
பயனும் மில்லை ..!

என்னதான்
முயன்றாலும்
என்னால்-
சிந்திக்காமல் இருக்க
முடிய வில்லை மனங்களின்
அவலங்களைத் தொட்டு ...!

ஆழமான கற்பனை செய்து
புழுதி கிளப்பித்
தூசியைப்
பத்திரிகைத் தளத்திலிருந்து
பார்வை வெளி நோக்கி
அனுப்புகிறாய்!

வாய் கொட்டும் ஒவ்வொரு
வார்த்தை யோடு
வேதனை கலக்கிறது,
அவள் வீசும்
சொற்களின் தழும்புகளால் ..!

என் பாச மூச்சுக்களின்
சுவாசங்களிழும்
முழு உணர்வுகளிழும்
காண முடிவது
இதயத்தின் கீறல்கள் ..!

நாண மற்றுப் போனவள்
ஆயினும்,
போலி உறவுகள் பின்தொடர நான்
முன் வந்து
உன் முன்னிலையில்
நின்றிட
வெட்க மடைகிறேன்,...!
வேதனைப் படுகிறேன்...!