செவ்வாய், 27 ஜனவரி, 2015

கறைபடிந்த எச்சங்கள் ...!



சிலர் முன்னேற்றங்களில்
பிரியம் காட்டாத
அழுக்கடைந்த நாவுகள் 
சாக்கடை தோன்றும் கரங்கள்
விமர்சனப் பாணியில்
பொறாமைச் துளிகளை வடிக்கும்
வஞ்சகப் பா வாசிக்கும்
தூற்றிக் கவி எழுதும் ..!
தலைக்கணம் பிடித்த,
தரம்கெட்ட வம்பர்களால்
கலையுலகம்
மீன் வாடிகளாய்
பிலால் நாற்றமடிக்கும் ..!
சிந்தனைதுளிகளின்
ஊற்றுக்களை -
அடைத்து விட்ட
கொடூர நெஞ்சங்களால்
தாக்கப்பட்டு மனசு
நோவினை செய்யும் .
குரோத் உறவுகளினால்
நேசிக்கப்பட்ட
போலி பாசம் காட்டப்பட்ட
கரையான் மனசுகள் ,
போய் வேஷ முகங்கள்
வரலாற்றுப் புத்தங்களை
புழுவாய் அரித்துக் குவிக்கும்
கறைபடிந்த எச்சில்களை
உமிழ்ந்து துப்பும்
காறித் தீர்க்கும் !
அன்புள்ளங்கள் மட்டும்
நேசவுள்ளங்களின்
பாச விலாசங்களை
மாற்றமடைந்து விடாது
காக்கும் !
தாகமாகிப் போன
வரண்ட நாவுகளில்
ஈரங்களைத் தேடியழையும் பாதங்களாய் .....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக