செவ்வாய், 27 ஜனவரி, 2015

அண்ணல் நபியின் புகழ் பாடுவோம்....!



இறைத் தூதர் நபி நாதர் அவதரித்த
இனிதான தினமதனைப் போற்றிடுவோம் 
மறை தன்னை மாந்தர்குப் போதித்த
மா நபியை மனதாரப் புகழ்ந்திடுவோம் ...!
இருள் சூழ்ந்த அரபு நகர் தனிலுதித்த
இறைவனின் தூதரென ஆகிவிட்ட
அருள் மிக்க அன்னலினைப் போற்றிடுவோம்
அகிலத்தின் ஒளி தன்னைத் துதித்திடுவோம் ..!
அறியாமை தனை யோட்டி அறிவான
அமுதூட்டி இஸ்லாத்தைக் காத்து விட்ட
நெறியான நேஸரினைப் பாடிடுவோம்
நேஞ் செல்லாம் நிறைந்து விடப் பாடிடுவோம்
அகிலத்தின் ஜோதியென் வந்து தித்த
அன்னலெம் பெருமானைப் போற்றிடுவோம்
'வஹி' மூலம் வல்லோனைச் சந்தித்த
வள்ளலினை வாயாரப் புகழ்ந்திடுவோம் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக