செவ்வாய், 27 ஜனவரி, 2015

சிதறிப் போகும் மனங்கள் ....!



ஏழை மக்களின்
நாடித் துடிப்புக்களை
தடவிப் பார்த்து 
சுடரொளியை
இருள் வீட்டுக்கு
மின்சாரமாய் தருபவர்களே
மக்களெல்லாம்
எதிர் பார்த்த
மனச் சந்தோஷம் ,
குவிந்து வரும்
பணம் பட்டியளுக்காய் -
இப்போது -
மாதம் மாதம்
உங்கள்வருகையினை
எதிர்பார்த்து மனசு ஏங்கி தவிக்கும் ..!
வீடுகளுக்குள் வந்து
பாவனையில்லாதிருக்கும்
மின்சார பொருட்களுக்கு
வீண் கணக்கு போட்டு விடாதீர்கள் !
மீட்டரை பார்த்து விட்டு
பொய் சொல்லி
அப்பாவிகளிடம் -
பந்தம் தேடிப் பெறாதீர்கள் ..!
அல்லாஹ்வின் கட்டளை மீறி
உண்மைகளை மட்டும்
நிராகரித்து விடாதீர்கள் ....!
ஏனெனில் .....
என்றோ ஒருநாள் ..,
தீயவர்களின் செயலைப் பார்த்து
உன் இறைவன்
கடலை மாற்றி நரகமாய் காட்டி விடுவான் ,
நடக்கும் பாதங்களுக்கு
நெருப்பு பாதணி அனுவித்து .
உனது -
இந்த பயணத்தில்
அக்கினிப் பொறிகள்
நகர்வுகளைத் தடுக்கலாம் ..!
பாதைகளை மூடலாம் ..!!
விஷப் பாம்புகள்
வந்தெதிர்க்கலாம் .!!!
எனினும் உங்கள்
பொய்யான கணக்குகளால் ...,
ஏழைகளின் பணத்தை சுரண்டுவதால் ..,
நரக நெருப்புக்கு
விறகாய்ப் போகும்
பொய் சத்தியம் கூட ,
போலி கடிதங்கள் கூட ...!
நரகத்தில் வாழ
நல்லாத்மாக்கள் விடை கொடடுத்து மறையும் ..!
உங்கள் தொழிலை
சாம்பலாக்குவதற்க்காகவே
நெருப்பு மழை
மண்ணில்
பொழியலாம் .!
மின்னலை மிஞ்சிய
இடி முழக்கம்
குறி வைக்கலாம் ..!!
எனினும் ...,
நிம்மதியை நாடி
மன ஆறுதல் தேடும்
அப்பாவி ஜென்மங்களை
சந்தோசமாய் வாழ்வதற்கு
கபடித்தனங்களை மாற்றுங்கள் ..!,
புதையல் தேடும்
பணப் பேய்களின்
சுரண்டல் மனங்கள்
சிதறிப் போகட்டும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக