வெள்ளி, 5 ஏப்ரல், 2013



வெயிலின் சூட்டால் 
உடலின் குருதி கொதித்து அலறுகின்றது 

விரும்பினாலும் 
விரும்பாவிட்டாலும் 
பரவிவிட்டநெருப்பைப் போல் 
அது பற்றி எரிகின்றது 

குளிர்காலம் 
கிழக்கு மண்ணை எட்டிப் பார்க்கவில்லை 
என்றாலும்
புழுக்கம் அதிகமாக இருந்தது
வியர்வையின் நீர்த் துளி

சூரியனின் ஒளிக் கதிர்
என் உடலினை தழுவுகிறது (கழுவுகிறது )

வங்கால விரிகுடா மண்ணில்
மெல்லுடலியின் மீது விழும் அலைத் துளிகளாய்
படுகிறது கச்சான் காற்று

கடற் கரையில்
செத்து விழும் மீன்கள்
இன்னொருவாழ்வினை தரிசிக்காமலே
மனித ஜென்மங்களுக்கு உணவாக்கப் படும்

நிலத்தை உறிஞ்சும் வேர்களின் நுனிகளாய்
என் ஆன்மாஈரமாக்கப் போகிறது.

வெயிலோடு
கலந்து விடும் தலைவலி
ஒரு பெண்ணின்உடலை
நோவிக்கிறது

வாசம் வீசும் பூக்கள்
தம் தண்டுடல்களைக் காப்பாற்றிக்கொள்ள
உமிழ் நீரின் அல்லது (சிறு நீரின் )துளிகளை
உறிஞசி யெடுக்க துடிக்கின்றன

நான் பிறந்த மண்
சஹாரா பாலை வனமாகியது

என் மனம்
சந்தோசமற்று தொலைகிறது

சூரியன் மறைகின்றன
இருள் நேரம்
தடவும் இரவுகள்

ஒவ்வொரு விடியலும்
தினமும் இனிப்போடு சேரும் நீரழிவு நோய் போல
புதிய வேதனையோடு தாக்குகிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக