திங்கள், 15 செப்டம்பர், 2014

நீரில் ஒரு தாமரை..!தாகம் தீர்(க்)கின்ற
சிவப்புத் துளி
நீரில் ஒரு தாமரை போல 
நோண்ட
நோண்ட
வளர்கிறது
மகிழ்கிறது
என் கரத்தின் நகம் 
உன் நிறை சுமை தான்
அதனால்
விண்ணைத் தொடாத மண்ணாய்
மண்ணைத் தொடாத விண்ணாய்
என்
நாட்டில் பொருட்களின் விலை வாசி
கோடி
கோடி
செல்வத்தை
தேடி
தேடித் தந்து
நாட்டின்
வருமானத்தை கூட்டிச் செல்லும்
கொழுந்து கூடைகள்
நீயென
கவிதைகள் பாடுகிறது
உறிஞ்சி துளைக்கும் அட்டைகளின் அக்கரமிப்பு
என்னை
தேனீ ராக மாற்றி,
உன்
வரண்ட நாவுகளுக்கு
சிவப்பைக் கொடுக்கலாம்
இனி -
குருதி துளிகளும்
தேயிலையாய் மாறலாம்.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக