திங்கள், 15 செப்டம்பர், 2014

மனிதர் இன்றி மறை இல்லை ..!



அல்லாஹ்
உன்னை நினைத்து தொழும்
எனக்குத் தருவாய் 
சுவனத்தை
பரிசாக ...!
இறை படைப்புக்கு
வரமாய் தந்தாய்
உலகில் படைக்கப்படாத பொருள்
உன்னால்
இறக்கப்பட்ட அல் -குர்ஆன்
ஓதவும் மனனம் செய்யவும் !
.
கூட்டவோ ,குறைக்கவோ
மாற்றவோ, மறைக்கவோ
எவராலும் முடியாது
எந்தக் கவிஞராலும் ,
எழுத்தாளராலும்
எழுத முடியாத ஆயத்துக்கள்
எல்லா அற்புதங்களும் உன்னில்
வருவது
வர இருப்பது
வரப் போவது எல்லாமே
மறையின்றி
மனிதர் இல்லை
மனிதர் இன்றி
மறை இல்லை
அல்லாஹ்
நாம் வாழுகின்றோம்
உன்
திரு மறையில் மனம் மகிழ்ந்து !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக