வெள்ளி, 5 ஏப்ரல், 2013





















ஒரு தாயின் பிறப்பு வலியின் மகிழ்ச்சியாய் 
எனக்குள் நுழைவதற்கு நீ

இருடலின் ஓருயிராய்
உட்புலன் உற்று 
கட்புலன் உணர்ந்து 
இயம்பும் உறவு
நெருப்பு தணல்கள் 
எரிந்துக்கொண்டேயிருக்கும்
பொறாமை உள்ளங்கள் 

பாசம் காட்டியும் 
புரிந்து விடவில்லை
சந்தேகம் 

போலி வார்த்தைகள் 
மானம் மரியாதை ஏதும் இல்லை
கையில் போதை (குடி வெறி )

சேவைகள் செய்யும் பேச்சு
பாசம் காட்டி பிச்சை கேட்டு வருகின்றது
அரசியல் வாதிகள்

யாசகம் கேட்டு வந்தவர்
முதலாளியானார்
அவரா இவர் ...?

தாகமென்று தேனீர்
அருந்திக் கொண்டுள்ளார்
பாட்டாளிகளின் வியர்வை

சுற்றி வளைப்பு
ஆட்டாக்கார்களின் தந்திரம்
பணம் சேகரிப்பு ...
துப்பிய உமிழ் நீரில் 
செழித்து வளர்கின்றது 
மனித நேயம்

வேதனைப்படும் மனங்கள் 
உடையா உணவா 
தொல்லை தரும் சமூகம் 

மார்க்க விடயத்தில் 
வாய் பேசா ஊமைகள் 
முஸ்லீம்அரசியல் வாதிகள்

தொழில்யில்லாப் பிரச்சினை
மாணவர்களின் போராட்டம்
மௌனமாய் அரசாங்கம்
பிரசவத்தின் .
உதயம் பிரசவமானாலும் சொல்லடிகளின் கதிர்கள் 
பிரகாசமாகும் போது மரணவலிகள் 
மாப்பிள்ளையின் -
உணர்ச்சிக்கு புரிவதில்லை ! தெரிவதில்லை!!
நான் 
பிறந்த மண்ணில் 
எப்போது சுந்ததிரமாய் 
வாழ்வேன் -
நிம்மதியாய் மூச்சு விடுவேன் ..?
வாழ் நாட்களில் 
ஏதோ சந்தோஷம் இல்லாத உணர்வு 
என்று -மண்ணில் 
நிம்மதி வரமோ ...?

ஆயுள் நாட்களின் நகர்வில் 
செத்துக்கொண்டிருக்கிறது
என் எதிர்பார்ப்பு 
இலட்சியம் 
கனவு 
மனசு 
இத்தியாதி !இத்தியாதி !!
அன்பின் வலியால் மனம் துடிக்க 

அழும் மனம் தந்தாய் -கண்ணீர் 

துளியால் இமயச் சிகரம் தாண்டும்

நினைவை தந்துவிட்டாய்!
உடம்பில் உயிருள்ளவரை சுவாசிக்கும்
எப்போதும்-
கவிதைமூச்சுக்களாகவே!

என்னை -
அறிமுகப் டுத்திக்கொள்ள
விரும்புகின்றேன் ....

நவீன சொற்களும் 
ஆழமான மரபுகளும் 
தொடாமலிருக்கும்
பெண்ணியத்தையும்
தடவிக் கொண்டவாறு...!
வாழ்க்கையில்
நிலைத்திருக்க வேண்டிய
மாபெரும் சொத்து 
பொறுமை ..!
உன்னை மறந்த
நினைவுகளை 
என்னால் சுவாசிக்க முடியாத போது 
என்னை மறந்த நினைவுகளை 
உன்னால் -
எப்படி சுவாசிக்க முடியும்
அன்பைத் தேடி 
கண்கள் -
அழுவதை விட 
இதயம் துடிப்பது அதிகம்












உன்னை 
தேடி தவிக்கின்றேன் 

சகீ -

கனவிலாவது உன் 
தரிசனம் கொடு..!
எனக்கு !
நீ
எதிர் பார்க்கும் அளவிற்கு 
எனதன்பு -
தூரமாக இருக்கலாம் 

அனால் -
உன்னன்பை நேசிக்கும் 
அளவிற்கு -
உயிரானவள்

உன் நினைவுகளின் 
அருகில் இருப்பவள்

உழைத்து உழைத்து நாமுந்தான் ஓட்டாய் தேய !
உளையாதார் ஊதித்தான் பெருக்கக் கண்டோம் !
இழைத் தே நாம் இடுப் பொடிய ! ஈ ரம் மில்லா ..
இதயத்தார் இருந்துறிஞ்சி "மேலே "சென்றார் !

முதுகினிலே ! கூ டையினை தாங்கி நாமும் !
முது கொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்ந்தோம் 
புது வாழ்வு ! நாம் கண்டதில்லை !
புல்லர்கள் வாழ்வுக்கே ! உரமாகிப் போனோம் !

ஓட்டை'லயம் 'தானெமது உலகும் வாழ்வும் '
உழைப்புத் தான் உயிரெமக்கு !ஓய்வோ தூக்கம்
காட்டையெல்லாம் கழனிகளாய்ச் செய்தோம் எங்கள்
கனவுகளோ ! கண்ணீரில் கரையக் கண்டோம் !

மலையகத்து இலைகளுக்குப் பசுமை சேர்க்க !
மணி மணியாய் வியர்வையினை வடித்து தந்தோம்
நிலை மாறி எம் வாழ்வில் பசுமை பூத்து
நின்மதியாய் வாழும் நாள் எனறு பூ க்கும் !

தொப்புள் கொடி உறவு தந்த
பாசம் எங்கு போனது ?
உடன் பிறப்பைத் தேடிச் சோர்ந்து போய்
துயரம் மனதில் துடிக்குது

உறவு மகரந்தத்தை உறிஞ்சிக் கொண்டு
வண்டு எங்கு பரந்தது ?
பச்சோலையை அறுத்துப் போடுவதற்காய்
புதிய தென்னை தேடுது !

நேசித்த இதயத்தை பிரித்த பின்னர்
பொறாமை எங்கு போகுது?
பொய்க்காக வாயை திறக்கும்
நாவு ருசிக்க பழியைத் தேடுது !

விட்ட மூச்சு சுவாசிக்கும் காற்றில்
வயது எங்கே போகுது ?
புதை குழியில் வாழ வேண்டித்
நல்லமல்களை தேடுது !
 


சகீ 
மனசு 
அன்பைத் தேடும் 
அனால் - 
அன்பு 
மனசைத் தேடாது ..!


மனிதப் படைப்பில் பல விதமான குணங்களும் 
சேர்ந்தது தான் உலகம்

அணுகுண்டை விட மோசமான ஆயுதம் தான் பொறாமை


என்னைப் பற்றி பேசாதே 
உலகமே உன்னை பற்றி பேசுகிறது


கவிஞன் பிறந்து வளர்கின்றான்.
கவிதைகளோ வளர்ந்த பின்பே பிறக்கின்றன.



உள்ளன்பு இருந்தும்
வெளிக்காட்ட முடியாது 
இதயத்தின் உணர்வுகள் 

வயிற்றுப் பசியின் கொடுரம் 
குடல் சுருங்கி அழுகிறது 
வறுமையின் வெளிப்பாடு 

பட்டம் பதவி கௌரவம் 
அப்படியே தந்தை மாதிரி
தன் குருதி

கவிதை எழுது கவிதை எழுது
வாசித்துக் கொண்டேயிருக்கும்
வானொலி

பொறாமையை விட
பொறுமைதான் தான் முக்கியம்
பெண்ணுக்கு அழகு

சோதன வராமலிருக்க
பிராத்தித்துக் கொண்டிருக்கிறது
மனசு

இதயத்தின் வாரிசு
பிரசவம் இல்லாமல் பிறந்தது
நட்பு

சுவாசிக்க முடியாமல்
மூச்சு அடைபடுகின்றது
தோழியின் நினைவு


ஏழைகளின் புள்ளடிகள் 
எதிர்பார்ப்போடு போடப்படுகின்றது 
பயனடைவது அரசியல்வாதி !

பொய்வாக்குறுதிகளை 
மழையாய் பெய்கின்றாகள் 
கிராமத்து எம்பிகள் !

இஸ்லாத்தில்அச்சுறுத்தல் 
மனதில் பதட்டம்
மனிதாபமற்றவர்களின் வெறித்தனம் !

பணத்தைப் போல்
குணம் மாறும்
சிலரது வசதி இருக்கும் வரைக்கும்!

வசதியில்லையென்றாலும்
மனிதனாய் வாழ்கின்றாகள்
ஏழை எளியோர்கள் !

கஷ்டப்பட்டு உழைத்தாலும்
சுவையாக உறிஞ்சப் படுகின்றது
நோண்டும் கரங்களின் குருதி (தேநீர் )




நான் பரிமாறிக்கொண்ட
சந்தோசத் துளிகளை விட
இன்று நான்
சிந்தும் கண்ணீர்த்துளிகள்
மிகவும்-
பெறுமதி வைந்தவை !


சிறு வயதில்
பெற்றவர்களைப் பிரிந்தே 
படிப்பதற்காய்
விடுதி வாழ்க்கை !

வாழும் பருவத்தில் 
பெற்றவர்களை இழந்து 
புலம்பி வாழும் மனசு 

வாழ்க்கை வேதனை தான் 

கொஞ்சம்
கொஞ்சமாய்
நகர்கின்றன
ஆத்மாவின் துடிப்புக்கள்
வயதின் எண்ணிக்கைகள் !

என்னாச்சு
என்று கேட்கிறார்கள்
மனசு
பனிக்கட்டி போல
துயரம் வந்தால்
கரைந்து போய்விடும் !







கண்ணுக்கு காணாத தென்றல் காற்று
வீட்டுக்குள்ளிருக்கும்
என்னை
எப்படி தடவிச் செல்கிறது ..?

உடம்பு இன்னும் இன்னும் தடவு யென்று
முற்றத்தை நோக்கி பாய்கிறது.

மரக்கிளைகளை தேடி
அலைகிறது காற்று.

புழுக்கத்தின் தாக்கம்
வியர்வையின் கசிவு

பாதங்கள்
காணல் நீரைத் தேடி -
பாலைவனத்தில் தவிப்பதே வேலை.

நாவில் வறட்சி
தாகத்தில் உமிழ் நீர் வற்ற
தொண்டை அழுது துழாவுகிறது.

இந்த வாழ்க்கையின் நகர்வுகூட
ஒரு மண்ணறையை நோக்கித்தான்

நிம்மதியற்ற தேடலாய் வாழ்க்கை
நிலையற்றுக் கிடக்கின்றன
 


புழுதில் புரழும் 
வாழ்க்கையென்று 
நினைத்து விடாதே 

மண்ணில் பிறந்தே 
மனித வாழ்வு 
என்று நினைத்துக் கொள்


வெயிலின் சூட்டால் 
உடலின் குருதி கொதித்து அலறுகின்றது 

விரும்பினாலும் 
விரும்பாவிட்டாலும் 
பரவிவிட்டநெருப்பைப் போல் 
அது பற்றி எரிகின்றது 

குளிர்காலம் 
கிழக்கு மண்ணை எட்டிப் பார்க்கவில்லை 
என்றாலும்
புழுக்கம் அதிகமாக இருந்தது
வியர்வையின் நீர்த் துளி

சூரியனின் ஒளிக் கதிர்
என் உடலினை தழுவுகிறது (கழுவுகிறது )

வங்கால விரிகுடா மண்ணில்
மெல்லுடலியின் மீது விழும் அலைத் துளிகளாய்
படுகிறது கச்சான் காற்று

கடற் கரையில்
செத்து விழும் மீன்கள்
இன்னொருவாழ்வினை தரிசிக்காமலே
மனித ஜென்மங்களுக்கு உணவாக்கப் படும்

நிலத்தை உறிஞ்சும் வேர்களின் நுனிகளாய்
என் ஆன்மாஈரமாக்கப் போகிறது.

வெயிலோடு
கலந்து விடும் தலைவலி
ஒரு பெண்ணின்உடலை
நோவிக்கிறது

வாசம் வீசும் பூக்கள்
தம் தண்டுடல்களைக் காப்பாற்றிக்கொள்ள
உமிழ் நீரின் அல்லது (சிறு நீரின் )துளிகளை
உறிஞசி யெடுக்க துடிக்கின்றன

நான் பிறந்த மண்
சஹாரா பாலை வனமாகியது

என் மனம்
சந்தோசமற்று தொலைகிறது

சூரியன் மறைகின்றன
இருள் நேரம்
தடவும் இரவுகள்

ஒவ்வொரு விடியலும்
தினமும் இனிப்போடு சேரும் நீரழிவு நோய் போல
புதிய வேதனையோடு தாக்குகிறது !
















யாசித்துப் பெருவதல்ல அன்பு 
நேசித்துப் பெறுவதே அன்பு

நட்பு















பல்லாண்டுகள்
மூச்சுக்களாய்
சுவாசித்துநேசிக்கிறேன் .

யாரோ
போட்டி

பொறாமையின் வடிகால் வெடித்து விடுகிறது

கொஞ்சம் பொறுமையாய்யிருங்கள்

மேடு, பள்ளம், ஆறு ,குளம் குட்டைகள் எல்லாம் வெள்ளமாய் ஒடி வருவேன்

மனதையும்
மனித நேயத்தையும்
உள்ளத்து உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும்
எதிர்பார்ப்புக்களையும்
அணை போட்டு அடைத்தாலும்

உடைத்தெழும் (உடைத்தோடும் )
உறிஞ்சி யெடுக்கும்
விரும்பியவற்றை ...!