வியாழன், 19 ஏப்ரல், 2012

முற்றுப் பெறாத வினாக்களாய் ....?
.....................................................................
கண் திறந்து பார்க்கையில்....
மனச் சுமையாய் இருந்தது என் கனவு
அன்பும் ,பாசமும் நிறைந்த...
மனதில் ஓர் இருளாய் நிகழ்வு ...!

உன் மனதினை நேசித்துப் பார்க்க ..
பல சோதனைகள் செய்தே இடம் தந்தாய்....
அன்று நான் அறியேன்.....
வாழ் நாள் முழுதும் நீ எனை நேசிக்க மாட்டாய் என....

எனக்கு பாசம் காட்டிய
உன் சுவாசம் ...
வெறும் வேஷம் என்றறியேன்....?

அன்பே .
உன்னிலிருந்து எனை பிரித்து விட்டாய் என்று .
அழுது துடிக்கின்றேன் ..
ஆயூள் முழுக்க நீ எனை விட்டு பிரிந்திருப்பாய்...
என்பதை அறியாமல் ...!

உன்னிலிருந்து பெற்ற அன்பை
தூய உறவில் -
வைத்துக் காப்பாற்றுவாய் என்றெண்ணினேன்....

திசையரு கருவியற்ற கப்பலைப் போன்று ...
வரண்ட நாவுக்கு பாலைவனத்து கானல் நீர் போன்று ...
கொதிக்கும் மண்ணில் துடிக்கும் புழுப் போன்று ....
எனை விட்டு விட்டு போவாய் ....
என அறியாமல்.......! புரியாமல் ...!!

நேசித்தவள் மனம் அறியாமல்...
பாசம் காட்டியவள் அன்பு புரியாமல்
யாரையோ நினைத்து அழுது அழுது ....
வாழ்கின்றேன்......
என் மன நிம்மதி இல்லாமல் ....

அன்பானவளின் இதயம் அறியேன் ......?
ஆனாலும் -
எனை நேசித்த ......
உறவுகள் என் உயிரின் உணர்வுகளாய் ..

என் மனதிற்கு ......
பாசம் ... காட்டியோர்
என் ஆத்மாவின் ... சுவாசமாய் .
எனைப்போல்...இன்னும் பலர்.....
என் நட்புள்ளங்களாய் ....
வாழ்கின்றோம் ஓர் இதயத்தில் ....
ஓட்டிப் பிறந்த சிசுக்க்களாய் ....

நட்புள்ளங்களின் ஆழம் அறியோம்
ஆதலால் ..
தோழி அன்று உன்...
மனதினில் நான் பூவாய்.....
மணந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
முள்ளாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
உனக்கு சுகமாய்....நான்
இருந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
சுமையாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
மனமின்றி -
எனை நேசித்து வளர்த்தாய்
தோழி -
உன் உறவு
இன்று -
என் மனதில் முற்றுப் பெறாத வினாக்களாய் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக