திங்கள், 23 ஏப்ரல், 2012

மனதுக்குள்
கற்பனைகளின் தூறல்கள் .

சிந்திய துளிகளை
சேர்த்து
சேமித்து குடமாக்கும்

பேனா எழுதியதில்
கண்கள் பார்க்கும்
மனங்கள் மகிழும்

கதையும் கவிதையும்
விமர்சன மொழி பேசும்.
பத்திரிகைச் செய்திகளில்
மின்னலும் தோன்றும் !

இதயக் கடலில்
சூரியன் குளிக்கும்.

மானம் இழந்த
அலையெனும் கன்னி
முத்தம் கொடுத்து
கரையை தடவிக்கொள்ள‌
அந்தி பூத்து
கவி வீசும் ...இது
நறுமணப் பூக்களின்
புதுக்கவிதை வாசங்கள்

இனிப்பில் மொய்க்கும் ஈக்களாகி
உடம்பை குழைத்த‌து

விரட்டும் வ‌ண்ண‌ம்
அடிம‌ன‌ இதயத்தை
வ‌ருடிக்கொடுக்கும்
அன்பு -
விரிந்து பரந்து
உறவைச் சுமக்கும்

நட்பின் சுரப்புகள்
மனங்களின் வழியே
பாசம் தெரியும்....
அன்பு தெரியும்...
ஆழம் தெரியும்...
அவள் முகமும் தெரியும்....

அவள்
நேசித்த வரிகளோ
பொங்கி வழிந்தது
கவிதை முகம்


ஒரு கவிதை விழுந்த‌தில்
அந்த பேனா கூட‌
காணமல் போனது ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக