திங்கள், 23 ஏப்ரல், 2012

தாகத்திற்கு கிடைத்த தண்ணீரைப் போல
நீ என் நாவிற்கு கிடைத்தாய்

என்னை புரியாத புதிரென்று சொல்கிறாய்!

பிறகு ஏன்
உன் நினைவுகளில் நான் ...!
சகீ ..,
ஒவ்வொரு சுவாசங்களும்
உன்னை மூச்சுக்களாய் சுவாசிக்கின்றது .
பாசத்தோடு நினைக்கின்றது

நான்
உன் மூச்சு
என்னை நீ விட்டாலும்
மீண்டும் சுவாசித்துத்தான்
வாழ வேண்டும்...
சகீ ..
உன் மடியில்
என் கண்ணீர் துடைக்க
சோல் கொடு
அல்லது
தோள் கொடு ....!
திரு மறையே
தினம் தினம்
உன்னை
ஓதி ஓதி
மனமகிழ்ந்து வாழ ஆசை.


அதனால்
ஐந்து நேரத் தொழுகையிலும்
அருளாய் பொழிகின்ற
இனிய மறையில்
பல ஸூசுக்களை மணனம் செய்தேன்

அந்த மறைக்குள்
நுழைய ...நுழைய
மன ஆறுதல் அதிகம் ....!
அல்ஹமதுலில்லாஹ் ....
மனதுக்குள்
கற்பனைகளின் தூறல்கள் .

சிந்திய துளிகளை
சேர்த்து
சேமித்து குடமாக்கும்

பேனா எழுதியதில்
கண்கள் பார்க்கும்
மனங்கள் மகிழும்

கதையும் கவிதையும்
விமர்சன மொழி பேசும்.
பத்திரிகைச் செய்திகளில்
மின்னலும் தோன்றும் !

இதயக் கடலில்
சூரியன் குளிக்கும்.

மானம் இழந்த
அலையெனும் கன்னி
முத்தம் கொடுத்து
கரையை தடவிக்கொள்ள‌
அந்தி பூத்து
கவி வீசும் ...இது
நறுமணப் பூக்களின்
புதுக்கவிதை வாசங்கள்

இனிப்பில் மொய்க்கும் ஈக்களாகி
உடம்பை குழைத்த‌து

விரட்டும் வ‌ண்ண‌ம்
அடிம‌ன‌ இதயத்தை
வ‌ருடிக்கொடுக்கும்
அன்பு -
விரிந்து பரந்து
உறவைச் சுமக்கும்

நட்பின் சுரப்புகள்
மனங்களின் வழியே
பாசம் தெரியும்....
அன்பு தெரியும்...
ஆழம் தெரியும்...
அவள் முகமும் தெரியும்....

அவள்
நேசித்த வரிகளோ
பொங்கி வழிந்தது
கவிதை முகம்


ஒரு கவிதை விழுந்த‌தில்
அந்த பேனா கூட‌
காணமல் போனது ...!
தோழி உன்னைக் கண்டா லென்ன
காணாமல் வந்தா லென்ன
இதய வானின் உதயத்தின் சுடர்
உள்ளத்தின் உறவு என்ப தாலே
நட்பினை மதித்து வாழும்
பாசமே நினைவுகளின் சுவாசமாவர்
அன்பென இணை வொமாயின்
அருளினை பெறுவோம் நாமே...
அன்பை நினைத்தவுடன் பெற முடயாது.
ஆனால் அது ஒருவரை உயிராய் நேசிக்கும் ...!
சகீ
உன் மனதில்
என் இதயம் உறங்க
இடம் கொடு...!
உடலிலும் உயிரிலும்

நிலைத்திருக்கும் ..(நிறைந்த்திருக்கும்)

அருள் மறை திருக்குர் -ஆன்

மனித ஆத்மாக்கள்

உன் முன்னே

பயப்படுகின்றன ...!

உதடுகள்

எழுத்துக்களை உச்சரிக்கின்றன

உன் வசனத்தை

மனங்கள் மனனமாக்கி

வசப்படுத்திக் கொள்ள..!

இரவும் பகலும்

நினைவவூட்டும் உன் வாசனங்களால்

இதயங்கள்உணர்ந்து

பாவங்களை செய்ய மறுக்கின்றன !

மறுமையின்

சுவர்க்கத்தை நாடி உன்னிடம்

மனம் மன்றாடி நிற்கும்..

பட்டு மேனியைக்

தொட்டுப் பார்க்க

வரவழைக்கும் மண்ணறை..!

அற்புதங்கள் காட்டும்

அல்லாஹ்வின் பேரற்புதமே குர் ஆண்
சகீ
உன் தாயும் என் தாயும்
வெவ்வேறாக இருக்கலாம்
ஆனால் -
அல்லாஹ்வின் படைப்பில்
நானும் -நீயும்
ஒரு உயிரில் கலந்த பிறப்புக்கள் ...!
தோழி
வானத்தை முத்தமிடா பூமியைப் போல
நீ- எனக்கு
உறவாய் கிடைத்தாய்...!

ஆனால் -நீயோ ,
தூரத்து தண்ணீர் தாகத்துக்குஉதவாதென்று
சொல்கிறாய்!

பிறகு -ஏன்
எனக்காக
உன் கண்ணில் நீர்?..
சகீ
நீ விடும்
ஒவ்வொரு மூச்சும்
உன்னை சுமக்கும்
சுவாசங்களாய்
எனக்குள் நகர்கின்றது
உன்
நினைவுகளோடு சங்கமிக்கிறது ...!
சகீ
ஆயுள் முழுவதும் உனக்காக
பிராத்தனை செய்கின்றேன்
நீ -
அல்லாஹ்வுககாக
அவன்
நல்லடியாராக
வாழ வேண்டுமென்பதற்காக ....!

வியாழன், 19 ஏப்ரல், 2012

முற்றுப் பெறாத வினாக்களாய் ....?
.....................................................................
கண் திறந்து பார்க்கையில்....
மனச் சுமையாய் இருந்தது என் கனவு
அன்பும் ,பாசமும் நிறைந்த...
மனதில் ஓர் இருளாய் நிகழ்வு ...!

உன் மனதினை நேசித்துப் பார்க்க ..
பல சோதனைகள் செய்தே இடம் தந்தாய்....
அன்று நான் அறியேன்.....
வாழ் நாள் முழுதும் நீ எனை நேசிக்க மாட்டாய் என....

எனக்கு பாசம் காட்டிய
உன் சுவாசம் ...
வெறும் வேஷம் என்றறியேன்....?

அன்பே .
உன்னிலிருந்து எனை பிரித்து விட்டாய் என்று .
அழுது துடிக்கின்றேன் ..
ஆயூள் முழுக்க நீ எனை விட்டு பிரிந்திருப்பாய்...
என்பதை அறியாமல் ...!

உன்னிலிருந்து பெற்ற அன்பை
தூய உறவில் -
வைத்துக் காப்பாற்றுவாய் என்றெண்ணினேன்....

திசையரு கருவியற்ற கப்பலைப் போன்று ...
வரண்ட நாவுக்கு பாலைவனத்து கானல் நீர் போன்று ...
கொதிக்கும் மண்ணில் துடிக்கும் புழுப் போன்று ....
எனை விட்டு விட்டு போவாய் ....
என அறியாமல்.......! புரியாமல் ...!!

நேசித்தவள் மனம் அறியாமல்...
பாசம் காட்டியவள் அன்பு புரியாமல்
யாரையோ நினைத்து அழுது அழுது ....
வாழ்கின்றேன்......
என் மன நிம்மதி இல்லாமல் ....

அன்பானவளின் இதயம் அறியேன் ......?
ஆனாலும் -
எனை நேசித்த ......
உறவுகள் என் உயிரின் உணர்வுகளாய் ..

என் மனதிற்கு ......
பாசம் ... காட்டியோர்
என் ஆத்மாவின் ... சுவாசமாய் .
எனைப்போல்...இன்னும் பலர்.....
என் நட்புள்ளங்களாய் ....
வாழ்கின்றோம் ஓர் இதயத்தில் ....
ஓட்டிப் பிறந்த சிசுக்க்களாய் ....

நட்புள்ளங்களின் ஆழம் அறியோம்
ஆதலால் ..
தோழி அன்று உன்...
மனதினில் நான் பூவாய்.....
மணந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
முள்ளாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
உனக்கு சுகமாய்....நான்
இருந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
சுமையாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
மனமின்றி -
எனை நேசித்து வளர்த்தாய்
தோழி -
உன் உறவு
இன்று -
என் மனதில் முற்றுப் பெறாத வினாக்களாய் ...?
குணம் மாறி போகும் இதயத்தின் மன நிம்மதி இல்லா வாழ்வு இல்லறம்  தனிமையில் வாழ்ந்து பாருங்கள், விட்டுக் கொடுத்து நடந்து பாருங்கள், இரு உயிர்கள் ஒன்றாய் இருந்து மனம் விட்டுப் பேசுங்கள் வாழ்க்கையில் சந்தோசத்தை தேடிப்பாருங்கள்,  கவலைகளைதட்டி விடுங்கள் நிம்மதியை தேடுங்கள் ,  வாழ்க்கை இதயத்தின் நிழல் கொஞ்சம் ஆறுதல் கொடுங்கள் உங்கள் நினைவுகளை சிறகடிக்க விடுங்கள்,  மனதில் சந்தோசம் அடையுங்கள், ஒரே மனதுக்குள் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்  சந்தேகத்தை விரட்டுங்கள் உண்மையைப் பேசுங்கள், வாழ்க்கையில் , நம்பிக்கை வையுங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்து வாழுங்கள் ...  இவை அனைத்தையும் செயலில் செய்து பாருங்கள் இல்லறம் உங்களுக்கு நல்லறமாகும் ...!
பிறந்த நாள் தொடக்கம்!
வாழ் நாள் முழுவதுமாய்
மனதில் போராட்டம் .....

காலங்கள் நகர நகர
வழக்கம் போல்
வாழ்க்கைப் பயணம்

மண்ணில் தொடங்கி
உயிர் -
மண்ணறை போகும் வரை ...!

திடீரென வாழ்க்கைச் சுமைகள்
சகிக்க முடியாத நிகழ்வுகள்
உள்ளத்தைச் சோகமாக்கிய
துயர பதிவுகள்

சுவாசத்தில்
மூச்சு மூச்சுக்களாய் பெருமூச்சுக்கள்
கஷ்டங்கள்
வாழ்க்கைச் சுமைகள்
சற்று அதிகமாய்
பெருகிப் பெருகி .......
தினம் தினமாய் பாரமாய்

இதயம் வழித்து சோகத்தை
உடலெங்கும் தெளித்தது
நாட்டின்
தொல்லை நிகழ்வுகள்
..

ஆண்கள் பெண்கள்
சிறியவர்கள்; பெரியவர்கள்;
ஏழை பணக்கார்கள்
இன்னும் இன்னுமாய்
எத்தனை எத்தனை ...,!உயிர்கள்
நாட்டின் தொல்லைகளில்

யாரிடமும் எதிர்ப்பில்லை!
எவரிடமும் முகச் சுளிப்பில்லை!

பசிக் கொடுமைகளோடு
முட்டி மோதிக் கொண்டு
ஏழை உள்ளங்களின்
மனங்களை
எல்லோரும் சோதனை செய்கின்றனர்

வரண்ட மனசு
கொதித்த இதயம்
மனிதர்களின் உள்ளத்து உணர்வு
நோகாமல் வாழ
அருளினை தந்து போ இறைவா

நன்றியோடு தொழுதவர்
வரிசையில்
நானும் ஓர் தொழுகையா ளராய்......


இறைவா
நோகாமல் வாழ
அருளினை தந்து போ

சகீ ;
நான் -
உன்னை அன்று பார்த்துப் பேசி இருந்தால்
பார்வையோடு பேசி விட்டு வந்திருப்பேன்
ஆனால் -
நீ -இன்று ;
என்னுயிரோடு கலந்து உறவாடி விட்டாய்
உன்னை
எப்படி நான் பிரிய முடியும் ...?
உன்னால் -என்னை
பிரிக்க முடியும் ...?

அன்பே ;
மனிதர்கள் பேசி பேசி பாவம் தேடுகின்றார்கள்
நாம் -
பேசாமலே பாசத்தை தேடுகின்றோம் ,,,!
நான்
சுமந்த கருவை
நானே ...,
கொலை செய்வதைப் போலவே
உன் பிரிவின்
துயரம் ...!
மனசு இங்கு
துடியாய் துடிக்கிறது
வேதனையோடு
அழுவதை பார்க்க
என் கண்களே
எனக்கு கிணறு ...!

அந்த பாசம்
சுரந்த பசு
அன்போடு பால் தரும்.

தாயின் உதிரத்தில்
தினமும் சங்கமிக்கும்
சுவையில்

அந்த‌ பேசாத உருவம் கூட‌
எனக்கு -
பெற்றவளின் குருதித் துளிகளின் ....,
பால் வாடையாய் ....-
வாசம் வீசிக் காட்டும் ..!

தாகம் போக்கும்
நாவுகள் -
உர‌சி உர‌சி
ஈரமாக்கும் போது
அந்த‌ துளி துளிச் சொட்டுகளின்
சந்தோசத்தோடு -
மனசு துங்கி விடுமோ
என்ற -
மன ஆறுதல் வருவதுண்டு ...!

என் நட்புள்ளத்துக்கு
இதயத்தின் அருமை புரியாதிருக்கும்

உண்மையான பாசமும்
புரிந்து உணர்வும்
வ்ந்தால்
உள்ளத்தின் ஏக்க‌ம் புரியும்

அப்போ
பாசத் துளிகள்
ஊற்றுக்கள் போல் கசியும்
உயிர்க் குழிக‌ளிலிருந்து ஓடும் குருதி போன்று
எல்லை மறந்து
அது வழியும்

பாசமான
நட்பின் தடவல்களாக
அன்புள்ளவர்களின்
ம‌ன‌த்தில் ம‌ட்டுமே
ப‌திவாகும்.

ஆமாம்
பால் தரும் பசுவுக்கும்
பாசம் காட்டும்
அன்புக்கும்
உள்ள வித்தியாசம் .
புரியும் ...!

பல நூறு
நினைவுச் சுவடுகள்
மின்னலாய்
வந்து மறையும்
விரிந்த மனம் இது


எந்த நட்புள்ளங்களையும்
அன்பாக -நேசிக்கின்ற
மனதினை
என்னுள் இருந்து
உணர்ந்தேன் ..!

மனத் தோட்டத்தில்
இதழ் விரிந்த
பூக்களின் வாசத்தை
நுகரந்து போனவர்களின்
சுவாசத்தில் மூச்சுக்களாய் போனது
ஞாபக்கத்தில் வந்தது ...!

நினைவுகள்அவற்றை மறக்கவில்லை
புதிய உறவுக்கு
மனம் இடம் கொடுக்கிறது
உள்ளம் அன்பைக் காதலிக்கிறது
அன்பு உள்ளத்தைக் காதலிக்கிறது

பிரிக்கவே முடியாத இந்த உறவை
எட்டி நின்று வேடிக்கை பார்
அன்பு மனம் திறந்து சொல்லும்...!

என்னிதயத்தில்
நெருப்பு தடவிக் கொண்டது
நினைவுகளோ -
புகையாய் ...
மனமோ..,
சாம்பலாய் ..

மரமே நீயாவது
நான் அமர்ந்து இருக்க
உன்
நிழலையாவது தா ...!