தூய இஸ்லாம்! வழியில் பிறந்தேழுந்தேன்!
மடமை யனைத்தையும் வீரமாய் துடைத்தெறிந்தேன்!
ஈமான் தனைக் கொண்டு புத்தியாய்நடை பயின்றேன்!
மாற்றம் படைத்து வைப்பேன்! அறியமை அகற்றி வைப்பேன்!
திருமறை ஓதலோடு: மார்க்கக் கல்வியை நான் கற்றேன்!
உயிர் பிரியும் நாள் வரைக்கும் தீனுக்காய் நான் துடிப்பேன்!
வீண் விரயயின்றி இறை வழியில் செலவளிப்பேன்!
சுவாசிக்கும் மூச்சியிலும் கலிமாச்சொல்லி மகிழ்றிருப்பேன்!
அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றி நடந்த பெண்ணல்ல
உண்மை முஸ்லிம் வயிற்றில்! அவதரித்த ஈமானியப் பெண்
இறை வணக்கத்தை இன்பமுடன் கடைபிடித்தவள் யான்
திசை மாறி வசை படி தலைக்கணமாய் வாழேன் யான்
மார்க்கப் போதனையை மழையாய் பொழியும்
தித்திக்கும் தேனாற்றல் தானாகப் பெற்றவள் நான்
எத்திசைப் போனாலும் என்னிதயம் அல்லாஹ்வை
வணங்கிப் போற்றிறிற்கும்! புகழினை பாடி நிற்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக