உயிர் வாழும் போதினிலே
ஆரோக்கியத்தை யாஅல்லாஹ் தந்திடுவாய்
ஊசி துளையாமல் உடலினை
வியாதியின்றி காத்திடுவாய் ..!
நோயற்ற வாழ்கையை
குறைவற்ற செல்வமாக்கிடுவாய்
அல்லாஹ்வே உன்னருளினை
தொழுகையில் தந்திடுவாய்!
அவதிப்படும் நோயாளிகளை
வேதனையில்லாது காத்திடுவாய்
நலம் பெரும் வழியினை
நிறைவாக காட்டிடுவாய்!
கலீமாவுடன் மறையும்
பாக்கியத்தை யாஅல்லாஹ் தந்திடுவாய்
உறுதியான ஈமானை
நிலையாக வைத்திடுவாய்!
சோதனையான வாழ்க்கையை
பொறுமையோடு தாங்கிடச்செய்வாய்
மனித நேயம் காத்திட
அருளினை கொடுத்திடுவாய்!
இறையருள் கட்டளைகளை
ஏற்று நடத்திடச் செய்வாய்
பாவம் செய்யும் மனதினை
தந்திடாது காத்திடுவாய்!